SLPP ஆட்சி மலர்ந்ததும் வடகிழக்கு பெண்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு

பெரமுனவின் மகளிர் முன்னணி செயலாளர் அசோக்க

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வின் ஆட்சி மலர்ந்தால் வடகிழக்கில் உள்ள பெண்களின் கண்ணீரை துடைப்போம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மகளிர் முன்னணியின் தேசிய செயலாளரும்,முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான அசோக்க லங்கா திலக்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மகளிர் முன்னணியின் மகளிர் மாநாடு மட்டக்களப்பு மாங்காட்டில் கிவேஸ் மண்டபத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இங்கு கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டார். இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும்,வேட்பாளருமான ப.சந்திரகுமார்,மகளிர் முன்னணியின் தமிழ் பிரிவுக்கான தலைவியும்,கல்வி அமைச்சின் இணைப்புச் செயலாளருமான திருமதி.மகேஸ்வரி மகிமைதாஸ் திருச்செல்வம்,மகளிர் முன்னணியின் மாவட்ட,தொகுதி,கிராம அமைப்பாளர்கள், மகளிர் அமைப்புக்கள் உட்பட சுமார் 2000 பெண்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்...

இந்த மாவட்டத்திலுள்ள பெண்கள் தலைமை தாங்கும் 40,000 குடும்பங்கள் எதிர்நோக்கும் பெண்களின் பிரச்சினை, வாழ்வாதாரம்,குடிநீர், பொருளாதாரம், கல்வி, பாலர் பாடசாலை சுயதொழில் உள்ளிட்ட பல பிரச்சினைகளை இம்மாவட்டத்தை சேர்ந்த எங்களுடைய வேட்பாளர் சந்திரகுமார் மிகவும் தெட்டத்தெளிவாக அறிந்திருக்கின்றார்.

வெல்லாவெளி தினகரன் நிருபர்

Mon, 07/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை