அமெரிக்காவில் நாளாந்த வைரஸ் தொற்று சாதனை அளவுக்கு உச்சம்

அமெரிக்காவில் கடந்த வியாழக்கிழமை சுமார் 55,000 கொரோனா தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. உலகில் எந்த ஒரு நாட்டிலும் ஒருநாளில் பதிவான அதிகூடியவைரஸ் தொற்று சம்பவங்களாக உள்ளது.

இதன்படி அமெரிக்காவில் வியாழக்கிழமை பதிவான 54,879 வைரஸ் தொற்று சம்பவங்களானது, இதற்கு முன்னர் பிரேசிலில் ஜூன் 19 ஆம் திகதி பதிவான 54,771 சம்பவங்கள் என்ற சாதனை எண்ணிக்கையை விஞ்சுவதாக உள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் நாளொன்றுக்கு சுமார் 22,000 புதிய சம்பவங்கள் பதிவான நிலையில் தற்போது தொடர்ச்சியாக ஏழு நாட்களாக 40,000 க்கும் அதிகமான புதிய தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றனர்.

அமெரிக்காவின் 50 மாநிலங்களுள் 37 மாநிலங்களில் நோய்த் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ரோய்ட்டர் செய்தி நிறுவனத்தின் தரவுகள் குறிப்பிட்டுள்ளன.

வேறு எந்த மாநிலத்தை விடவும் புளோரிடாவில் கடந்த வெள்ளிக்கிழமை 10,000க்கும் அதிகமான நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

அமெரிக்காவில் நாளொன்றில் பதிவாகும் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 100,000 ஐ எட்டக் கூடும் என்று அந்நாட்டு ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்க்கான தேசிய நிறுவனத்தின் தலைவர் அன்தோனி பவுச்சி இரண்டு தினங்களுக்கு முன் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sat, 07/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை