இயக்கச்சி வெடிப்புச் சம்பம்; முன்னாள் போராளி பலி

இயக்கச்சி வெடிப்புச் சம்பம்; முன்னாள் போராளி பலி-Iyakachchi Blast-Hospitalized 44 Yr Old Dead

நாட்டு வெடிபொருள் தயாரித்த போது ஏற்பட்ட வெடிவிபத்தில் படுகாயமடைந்த முன்னாள் போராளி அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று (08) அதிகாலை உயிரிழந்தார் என, பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இயக்கச்சியைச சேர்ந்த தங்கராசா தேவதாசன் (44) எனும் முன்னாள் போராளியே சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில், கடந்த 03ஆம் திகதி மீன் ரின்னுக்குள் C4 வெடிமருந்தைப் பயன்படுத்தி நாட்டு வெடிபொருள் செய்த போதே வெடிவிபத்து ஏற்பட்டது என்று பளை பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

வெடி விபத்தில் படுகாயமடைந்த நபரை கிளிநொச்சி வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக அனுராதபுர வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையிலையே சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த வெடிப்பு சம்பவத்தையடுத்து அவரது மனைவி உட்பட இருவர், பயங்கரவாத ஒழிப்பின் தற்காலிக விதிமுறைகள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதே வேளை, முன்னாள் போராளிகள் பலர் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(யாழ்.விசேட நிருபர் - மயூரப்பிரியன்)

இதன்போது குறித்த வீட்டிலிருந்து மேலும் 02 குண்டுகள் உள்ளிட்ட வெடிமருந்துகள் மற்றும் கரும்புலி நினைவுநாள் தொடர்பான குறிப்பொன்றையும் மீட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

Wed, 07/08/2020 - 09:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை