அமெரிக்கா WHO இலிருந்து விலகுவதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு

அமெரிக்கா WHO இலிருந்து விலகுவதாக உத்தியோகபூர்வ அறிவிப்பு-Trump Officially Begun to Withdraw the US From the WHO

அமெரிக்கா உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து (WHO) விலகுவது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் நிர்வாகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 2021 ஜூலை 06 முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளதாக, வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

WHO உடனான அமெரிக்காவின் உறவை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தனது விருப்பத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்து ஒரு மாதத்திற்கும் மேலான நிலையில், நேற்றையதினம் (07) அவரது காங்கிரஸ் கட்சி இந்த முடிவை உத்தியோகபூர்மாக அறிவித்துள்ளது.
அத்துடன் உலக சுகாதார ஸ்தாபனம் சீனாவின் கருவியாக உள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இம்முடிவு பொறுப்பற்றது என்பதோடு, தவறானது என, ஜனநாயகக் கட்சியினர் தெரிவித்துள்ளனர். தொற்றுநோய் பெருகி வரும் இந்நிலையில், நெருக்கடியை எதிர்கொள்ள சர்வதேச ஒத்துழைப்பு மிக முக்கியமானது என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் உலகம் முழுவதையும் தொடர்ந்தும் பிடித்துக்கொண்டிருக்கும் இந்நிலையில், அமெரிக்கா முழுவதும் பல மாநிலங்களில் நோய்த்தொற்றுகள் அதிகரித்துள்ள நிலையில், ட்ரம்ப் நிர்வாகம் இவ்வாறான முடிவை எடுத்துள்ளது.

அமெரிக்காவில், சுமார் 3 மில்லியன் பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, சுமார் 130,000 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில், 11.6 மில்லியன் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதோடு, சுமார் 540,000 பேர் மரணமடைந்துள்ளதாக, ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன.

Wed, 07/08/2020 - 10:23


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை