கட்சியை ஒற்றுமையுடன் செயற்படுத்த முடியாத தலைவர்களுக்கு நாட்டை ஒப்படைக்க தயாரில்லை

தலைவர் இல்லாமல் பிளவுபட்டு தமது கட்சியை ஒற்றுமையுடன் செயற்படுத்த முடியாத தலைவர்களுக்கு நாட்டை ஒப்படைக்க தயாரில்லையென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

அதேவேளை,ஊழல் மோசடிகளுக்கு இடமளிக்காது முன்னேற்றகரமான நாட்டை கட்டி யெழுப்பக்கூடிய தூய்மையான தலைவர்கள் எமக்குக் கிடைத்துள்ளனரென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றி மக்களுக்கு பாதுகாப்பு வழங்கி நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துபவர்களுக்கே மக்கள் வெற்றியைப் பெற்றுக் கொடுக்க தயாராகியுள்ளனர். நாட்டின் புலனாய்வுப் பிரிவினர் 150 தடவைகள் அறிவுறுத்தியும் சஹ்ரானின் தாக்குதல் இடம்பெற்றது. அவ்வாறான உதாசீனமான அரசாங்கமே இந்த நாட்டில் இருந்துள்ளது. புதிய அரசாங்கம் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது மட்டுமன்றி உலகின் முன்னேற்றகரமான நாடாக இலங்கையை கட்டியெழுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளது. நாட்டில் ஊழல் மோசடிகளுக்கு இடமளிக்காது கோட்டாபய ராஜபக் ஷ தலைமையில் தூய்மையான பாதையில் நாடு வழிநடத்தப்படும். (ஸ)

 லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 06/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை