தோட்ட முகாமையாளருக்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டம்

மனிதநேயமற்ற விதத்தில் செயற்படும்

 

மடுல்சீமை பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பொகவந்தலாவ தெரேசியா மற்றும் மோரா தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் நேற்று பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தெரேசியா தொழிற்சாலைக்கு முன்பாக ஒன்றுதிரண்ட தொழிலாளர்கள், நிர்வாகத்துக்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டத்தையும் முன்னெடுத்தனர்.

மனிதநேயமற்ற முறையில் கொழுந்து பறிமுதல் செய்யப்படுகின்றது, பல தொழிலாளர்களுக்கு 3ஆயிரம் ரூபாவே சம்பளமாக கிடைத்துள்ளது, இந்த தொகையை வைத்துக்கொண்டு எப்படி வாழ்வது? என தொழிலாளர்கள் இதன்போது கேள்வி எழுப்பினர். அத்துடன், தோட்ட முகாமையாளர் உடன் வெளியேற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இது தொடர்பில் தெரேசியா தோட்ட முகாமையாளர் சுகத் ஆரியரத்னவை தொடர்புகொண்டு வினவியபோது, “அண்மைய காலப்பகுதியில் நிலவிய கடும் வறட்சியால் தொழிலாளர்கள் 8 கிலோ கொழுந்து பறிந்தாலும் ஒரு நாள் பெயர் வழங்கப்பட்டது. கொழுந்து அதிகளவு காணப்படும் காலப்பகுதியில் இது ஈடுசெய்யப்படும் என தொழிற்சங்க தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. அவர்களும் உடன்பட்டனர். இதன்படியே நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொழிலாளர்கள் கூறுவதுபோல் 100 கிலோவை நாம் பறிமுதல் செய்யவில்லை” என்றார்.

 

(நோட்டன் பிரிட்ஜ் நிருபர்)

Tue, 06/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை