சிவசிதம்பரத்தின் 18ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வு அனுஷ்டிப்பு

தமிழ்த் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் நல்லூர் உடுப்பிட்டிதொகுதிகளின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் உப சபாநாயகருமான அமரர் மு.சிவசிதம்பரத்தின் 18ஆம் ஆண்டு நினைவு நாள் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

காலை 10 மணியளவில் நெல்லியடி பஸ் நிலைய சதுக்கத்தில் அமைந்துள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு முன்பாக இவ் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது. கரவெட்டி அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் உபாலி எஸ் பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் தலைவர் பொதுச்சுடர் ஏற்ற வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் கே கருணானந்தராசா, உறுப்பினர் சிவஞானசுந்தரம் ஒன்றியத்தின் செயலாளரும் ஓய்வு நிலை அதிபருமான இ.இராகவன் உள்ளிட்டோருடன் பொதுமக்களும் அன்னாரின் உருவச்சிலைக்கு மலர்மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

இதேவேளை இந்நிகழ்வு ஆரம்பமாவதற்கு முன்னதாக தமிழர் விடுதலைக் கூட்டணியில் யாழ் மாவட்ட வேட்பாளராக போட்டியிடும் அரவிந்தன் அமரர் சிவாவின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியிருந்தார்.

ஒன்றியத்தின் பிரதான நிகழ்வுக்குப் பின்னர் புளொட் அமைப்பின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளருமான த.சித்தார்த்தன் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றார்.

 

 

கரவெட்டி தினகரன் நிருபர்

Tue, 06/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை