அனுராதபுர பி​​ரதேசம் சுகாதார துறையில் பின்னடைவு

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி

அனுராதபுரத்திலிருந்து ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சர் உருவாகினாலும் சுகாதாரத் துறை குறித்து கவனம் செலுத்தப்படவில்லை. கவலைக்கிடமான நிலையே இங்கு காணப்படுகிறதென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.

அனுராதபுரம் உள்ளூராட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த அவர்,

நாட்டின் சுகாதாரத் துறை திட்டமிட்ட அடிப்படையில் நடைபெற வேண்டும்.அனுராதபுர ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவுடன் கூடியதாக சகல வசதிகளுடன் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.அவ்வாறு அபிவிருத்தி ஏற்பட்டிருந்தால் நோயாளிகள் நிலத்தில் உறங்கும் நிலை ஏற்படாது.

எமது முன்னாள் ஜனாதிபதி, சுகாதார அமைச்சராகவும் இருந்தார்.அவர் தமது பிரதேச ஆஸ்பத்திரிகள் குறித்து கவனித்தாரா? என்ற சந்தேகம் காணப்படுகிறது. இப்பிரதேச சுகாதார நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கடந்த ஆட்சியில் 40 பில்லியன் ரூபா நிதி மருந்து கொள்வனவுகளுக்காக செலுத்தப்பட்டிருக்கவில்லை. மருந்து வகைகளுக்கான டெண்டர்கள் உரிய காலத்தில் கோரப்படவில்லை. நான் அமைச்சு பொறுப்பை ஏற்கையில் 400 வகை மருந்துகளுக்கு தட்டுப்பாடு காணப்பட்டது. இவ்வாறான நிலைமைதான் அன்று காணப்பட்டது என்றும் அவர் கூறினார்.(பா)

Tue, 06/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை