பொதுத் தேர்தல் கடமைகளில் 10,000 சுகாதார ஊழியர்கள்

பொதுத் தேர்தலை சுகாதார வழிகாட்டலுக்கு அமைய நடத்துவதற்காக வாக்களிப்பு நிலையங்கள், வாக்குகள் எண்ணப்படும் நிலையங்களில் கடமையில் ஈடுபடுத்தும் வகையில் சுகாதாரத் துறையை சேர்ந்த பத்தாயிரம் பேர் நியமிக்கப்பட இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் டாக்டர் அனில் ஜாசிங்க தெறிவித்துள்ளார்.

இது குறித்து தேர்தல் ஆணைகுழுவிற்கு அறிவித்து இருப்பதாகவும் அவர் கூறினார். தேர்தலின் போது சுகாதார நடைமுறைகளை பேணும் பொருட்டு தயாரிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல் கையேடு அண்மையில் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரியவிடம் கையளிக்கப்பட்டதாக தெரிவித்த டாக்டர் அனில் ஜாசிங்க.

அதில் வாக்காளர் அட்டைகள் விநியோகம் தொடங்கி வாக்களிப்பு, பிரசார நடவடிக்கைகள், வாக்கு எண்ணல் உள்ளிட்ட சகல செயற்பாடுகளின் போது கடைபிடிக்கப்பட வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் பல பிரிவுகளாக அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையிலேயே 10 ஆயிரம் சுகாதார ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்த பேர் குறிப்பிடப்படும் பத்தாயிரம் சுகாதார ஊழியர்களுக்கும் தபால் மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பிப்பதற்கு வசதியாக அவர்களுக்கு கால அவகாசம் பெற்று கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தேர்தல் பிரசாரக் கூட்டங்களை நடத்தும் கட்சிகளும் வேட்பாளர்களும் ஒரு கூட்டத்தில் கலந்த கொள்வோரின் எண்ணிக்கை 100க்கு மட்டுப்படுத்தியிருப்பதாகவும் வேட்பாளர்கள் வீடு வீடாகச் செல்லும் போது 3 பேருடன் மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவற்றின் போது சமூக இடைவெளியை பேண வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

கட்சிகளும், வேட்பாளர்களும் முடியுமானவரை கூட்டங்களை மட்டுப்படுத்திக் கொள்ளுமாறும் தமது பிரசாரங்கள், கொள்கை விளக்கங்களை மக்கள் மயப்படுத்த ஊடகங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு டாக்டர் அனில் ஜாசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

எம். ஏ. எம். நிலாம்

Wed, 06/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை