ஆடு மேய்க்கும் பெண்ணின் மாலையை அறுத்து சென்ற சந்தேகநபர் கைது

ஆடு மேய்க்கும் பெண்ணின் மாலையை அறுத்து சென்ற சந்தேகநபர் கைது-Chain Snatching-26-Yr Old Arrested-Sammanthurai

வயல்வெளியில்    ஆடு  மேய்த்துக்கொண்டிருந்த வயோதிப பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கமாலையை மோட்டார் சைக்கிளில் சென்று அறுத்துச் சென்றவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று (08)  மாலை 4.00 மணியளவில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தை பகுதியில் வயல் பகுதியில்  60 வயது மதிக்கத்தக்க வயோதிப பெண் ஒருவர்   ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்துள்ளார்.

இவ்வேளை குறித்த பகுதியினூடாக வந்த 26 வயது மதிக்கத்தக்க சந்தேகநபரான இளைஞர் குறித்த வயோதிப பெண்ணை நெருங்கி அவரது கழுத்தில் இருந்த ரூபா ஒரு இலட்சத்திற்கும் அதிகமான ஒன்றரை பவுண்  பெறுமதியுடைய தங்க மாலையை அறுத்துக் கொண்டு தலைமறைவாகியுள்ளார்.

பாதிக்கப்பட்ட  குறித்த பெண்  சம்மாந்துறை பொலிஸாருக்கு வழங்கிய  முறைப்பாட்டினை  அடிப்படையாக கொண்டு சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச். ஜயலத்தின் வழிகாட்டலுக்கமைய  சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையில் உப பொலிஸ் பரிசோதகர் ஜனோசன் உள்ளிட்ட குழுவினர்  மேற்கொள்ளப்பட்ட  நடவடிக்கையினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன் களவாடப்பட்ட குறித்த தங்க நகையும் சந்தேகநபரினால் திருட்டு முயற்சிக்கு பயன்படுத்தப்பட்ட  மோட்டார் சைக்கிளிலும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது கைதான சந்தேகநபரை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

(பாறுக் ஷிஹான்)

Sat, 05/09/2020 - 15:01


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை