மனுவில் குறிப்பிடப்பட்ட காரணங்களை மார்ச் 5 ஆம் திகதி உறுதிப்படுத்த உத்தரவு

சட்டத்தரணி ஹிஜாஸ் தொடர்பான வழக்கு

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்பான வழக்கு நேற்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சட்ட மாஅதிபருக்கு மனு ஒன்றை சமர்ப்பித்து எதிர்வரும் மே 5 ஆம் திகதி உரிய வழக்கின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களை உறுதிப்படுத்துமாறு நீதிபதிகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவின் சட்டத்தரணிகளுக்கு அறிவித்துள்ளனர்.

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 17ஆம் திகதி இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில் அவரது சட்டத்தரணிகள் ஏப்ரல் 21ஆம் திகதி தயாராக இருந்தபோது ஊரடங்கு சட்டம் மற்றும் கொழும்பு புதுக்கடைப் பிரதேசத்தில் நிலவிய நிலைமையை அடுத்து நீதிமன்றம் மூடப்பட்டதால் அதனை மேற்கொள்ள முடியாமல் இருந்தது.

எவ்வாறாயினும் ஏப்ரல் 30ஆம் திகதி ஊரடங்குச் சட்டத்துக்கு மத்தியில் மூடப்பட்டிருந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் திறக்கப்பட்டது.

அந்த நிலையில் மேற்படி வழக்கை அவசர வழக்காக குறிப்பிட்டு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அதற்கிணங்க நேற்றைய தினம் வழக்கு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிபதிகள் சட்டத்தரணி ஹிஸ்புல்லாவின் சட்டத்தரணிகளுக்கும் சட்ட மாஅதிபருக்கும் மகஜர் ஒன்று கையளித்து எதிர்வரும் 5 ஆம் திகதி மேற்படி வழக்கின் மகஜர் தொடர்பான விடயங்களை உறுதிப்படுத்துமாறு அறிவித்துள்ளார்.

ஏற்கனவே ஏப்ரல் 24ஆம் திகதி சட்டத்தரணிகள் 158 பேர் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர்.

அந்தக் கடிதத்தில் சட்டத்தரணி ஹிஸ்புல்லா தொழில் ரீதியாக கைது செய்யப்பட்டுள்ளாரா? என்று கேள்வி எழுப்பி உள்ளதுடன் அவர் கைது செய்யப்படும்போது எந்த ஒரு சட்ட முறைமையும் பின்பற்றப்படவில்லை என்றும் அவர் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அத்துடன் சட்டத்தரணிகள் சங்கம் அவரது உரிமை தொடர்பில் தலையிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேற்படி கடிதம்  அழுத்தம் கொடுப்பதாகவும் முஸ்லிம் சட்டத்தரணிகள், மனித உரிமைகள் சம்பந்தமான அரசசார்பற்ற அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் செயற்பாட்டாளர்களான சட்டத்தரணிகள் மூலம் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் அது தொடர்பில் அவர்களுடன் தொடர்புபட்ட ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் வெகுவான பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதற்கிணங்க மேற்படி வேண்டுகோளுக்கு பதிலாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திடம் ஜனாதிபதி சட்டத்தரணிகள் 07 பேர் உள்ளிட்ட 216 சட்டத்தரணிகளின் இணக்கப்பாட்டுடன் தயாரிக்கப்பட்ட கடிதம் ஏப்ரல் 30ஆம் திகதி சட்டத்தரணிகள் சங்கத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதில் பல விடயங்கள் தெளிவு படுத்தப்பட்டு சட்டத்தரணிகள் சங்கம், சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கைது செய்யப்பட்டமை தொடர்பில் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு செயற்பாட்டிலும் தொடர்புபடக்கூடாதென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் விசாரணை நடவடிக்கைகள் எந்த ஒரு தலையீடுமின்றி இடம்பெற இடமளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கு இணங்கவே இந்த வழக்கு விசாரணைகளுக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. (ஸ)

Sun, 05/03/2020 - 09:03


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை