கேப்பாப்புலவு தனிமைப்படுத்தல் முகாமில் உயிரிழந்த முதியவரின் சடலத்தை எரிக்க எதிர்ப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு விமானப்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த முதியவர் இருவர் நேற்று உயிரிழந்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்த  80 வயதுடைய குணசிங்கபுர பகுதியை சேர்ந்த யாசகம் செய்கின்ற வேலு சின்னத்தம்பி என்பவருக்கு கொரோனா தொற்று இல்லை  என்று வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்திய நிலையில் உடலத்தை முல்லைத்தீவு குமாரபுரம் மாவடிப்புலவு இந்து மாயானத்தில் எரிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது

இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் முள்ளியவளை பொலிஸார் வைத்தியசாலை  பிரேத அறையில் இருந்து  சடலத்தை வாகனத்தில்  ஏற்றிய பின்னர் வைத்தியசாலை நிர்வாகத்தினரையும் இறுதிக்கிரியைகள் நடைபெறும் இடத்துக்கு அழைப்பதற்கான நீதிமன்ற கட்டளை  இல்லாத நிலையில் சுமார் இரண்டுமணி நேரமாக சடலம் ஏற்றிய வாகனம் வைத்தியசாலை வளாகத்தில் இருந்தது.

இதனைத்தொடர்ந்து அந்த பிரச்சினை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு சடலம் எடுத்து செல்ல தயாரான போது முல்லைத்தீவு இளைஞர் குழு ஒன்று வருகைதந்து சடலத்தை எரிப்பதற்கு தடை விதித்தது.

அவர்கள் மின்சாரத்தில் தகனம் செய்வதற்கு இங்கு வசதி இல்லை எனவும் எமது பாதுகாப்பை கருதி சடலத்தை வவுனியாவுக்கு எடுத்து சென்று எரிக்குமாறு கோரிய நிலையில் சடலம் ஏற்றிய வாகனம் வைத்தியசாலை முன்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை எந்த முடிவுகளும்   எடடப்படவில்லை.

மாங்குளம் குறூப் நிருபர் 

Sun, 05/03/2020 - 08:51


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை