உரிமைகளை விட அபிவிருத்தியே முக்கியம்

பொருளாதார சுதந்திரம் பெறாத எந்த ஒரு சமூகமும் ஒரு நாளும் அரசியல் சுதந்திரம் பெற முடியாதென முன்னாள் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார். 

யுத்தம்  முடிந்து பல வருடங்கள் கழிந்த பின்பும் இன்றும் கூட தமிழ் மக்களின் உரிமை என்ற விடயத்தில் தமிழ் மக்கள் மத்தியிலேயே தெளிவு இல்லாத நிலை காணப்படுகின்றது.

சிலர் சமஷ்டி வேண்டும் என்றும் மற்றும் சிலர் சமஷ்டி தேவையில்லை என்றும் இன்னொரு தரப்பினர் அரசியலமைப்பில் நாம் இரண்டாம் தரப்பாக அல்லாமல் சம அந்தஸ்தை வழங்க வேண்டும் என்றும் பல கோணத்திலும் கோரிக்கைகள் முன் வைக்கப்படுகிறது.

இவ்வாறு விவாதங்களுக்கும் கருத்து மோதல்களுக்கு உட்பட்டு நீண்ட காலங்களாக இந்த சர்ச்சை முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டே போகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

உரிமையை விடஅபிவிருத்தியின் முக்கியத்துவமே அதிகமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 04/27/2020 - 08:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை