குவைத்திலுள்ள இலங்கையர் நாடு திரும்ப மே 30 வரை அவகாசம் வழங்க கோரிக்கை

குவைத் தூதுவரிடம் அமைச்சர் தினேஷ் கோரிக்கை

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்களுக்கு அந்நாட்டிலிருந்து வெளியேறுவதற்காக குவைத் அரசாங்கம் வழங்கியுள்ள கால அவகாசத்தை எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்குமாறு வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சில் தம்மைச் சந்தித்த குவைத்துக்கான இலங்கைத் தூதுவர் கலாப் தஹயிரிடம் அமைச்சர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அது தொடர்பில் மிகவிரைவாக சாதகமான பதிலை குவைத் அரசாங்கத்திடமிருந்து பெற்றுத்தருவதாக குவைத் தூதுவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

எனினும் குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்களுக்கு உணவு மற்றும் இருப்பிட வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கு அந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேற்படி இலங்கையர்களுடனான தொடர்புகளை அந்நாட்டு இலங்கை தூதுவராலயத்தின் தொழிலாளர் நலன்புரி பிரிவு ஊடாக மேற்கொண்டுவருகிறது.

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்காக அந்நாட்டு அரசாங்கம் வழங்கியிருந்த கால அவகாசம் கடந்த 25 ஆம் திகதியுடன் நிறைவு பெறுகின்றது.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்த ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 04/27/2020 - 08:49


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை