நிர்வாகத்துக்கு எதிராக கிலானி தோட்ட மக்கள் போராட்டம்

தோட்ட நிர்வாகத்தின் அடக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொகவந்தலாவ கிலானி தோட்ட மக்கள் நேற்றுமுன்தினம் பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடும் வறட்சியான காலநிலைக்கு மத்தியிலும் நாளொன்றுக்கான பெயரை பெற்றுக்கொள்ள நிர்வாகத்தில் குறிப்பிடப்படும் அளவுக்கு கொழுந்து பறிக்கவேண்டும் என்றும், அவ்வாறு இல்லாவிட்டால் அரைநாள் பெயரே பதியப்படுகிறது என்றும் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தமக்கு நீதி வேண்டுமென வலியுறுத்தியுமே தொழிலாளர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பில் தோட்ட முகாமையாளரிடம் வினவியபோது,

” நாளொன்றுக்கான பெயருக்கு 16 கிலோ கொழுந்து பறிக்கவேண்டும். எனினும் தற்போதைய காலநிலை சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு 10 கிலோ பறிக்குமாறு கோரியுள்ளோம்.

எனினும், இவர்களில் 8 கிலோ பறித்துவிட்டு ஒருநாள் பெயரை எதிர்பார்க்கின்றனர். அதற்கே நாம் அனுமதி வழங்கவில்லை. மோரா மற்றும் தெரேசியா தோட்ட தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 10 கிலோ கொழுந்து பறிக்கின்றனர்” - என்றும் அவர் குறிப்பிட்டார்.

Wed, 04/22/2020 - 09:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை