உள்நாட்டு மருந்து உற்பத்தியை 60-75 வீதம் வரை அதிகரிக்க சுகாதார அமைச்சு திட்டம்

உள்நாட்டில் பெரசிடமோல் சுவாச நோய்களுக்காக நோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் கொலஸ்ட்ரோல் போன்ற தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தும் மருந்துகளின் உற்பத்தியை அதிகரிப்பதினூடாக தற்பொழுதுள்ள தொற்றுநோயால் ஏற்படும் ஏனைய சிக்கல்களைத் தீர்க்க சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.

COVID -19 தொற்றிலிருந்து நாட்டு மக்களை பாதுகாப்பதற்கும் தொற்று பரவுவதை தடுக்கவும் ஜனாதிபதியின் தலைமையின் கீழ் மற்றும் சுகாதார அமைச்சரின் வழிநடத்தலின் கீழ் அரசாங்கம் பல்வேறு சுகாதார பாதுகாப்பு முறைகளை முன்னெடுத்து வருகிறது.

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபத்தினூடாக உற்பத்தி செய்யப்படும் பெரசிமோல் 500mg (pacidol) மருந்து உற்பத்தி அளவையும் சுவாச நோய்க்கு வழங்கும் நோய் எதிர்ப்பு மருந்துகளினதும் உற்பத்தி அளவையும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  இதனூடாக தொற்று நோயை கட்டுப்படுத்தவும் அதற்காக நேரடி பங்களிப்பு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனுடன் இணைந்ததாக உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் கொளஸ்ட்ரோல் போன்ற தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தும் மருந்துகளின் உற்பத்தியை அதிகரிப்பதினூடாக தற்போதுள்ள தொற்றுநோயால் ஏற்படும் ஏனைய சிக்கல்களைத் தீர்க்க தொடர்ச்சியான விநியோகமும் வழங்கப்படுவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ரத்மலானையிலுள்ள அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு விஜயம் செய்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி  .அரச மருத்தாக்கல் கூட்டுத்தாபன பணிகளை ஆராய்ந்தார்.

நாட்டின் மொத்த மருந்து தேவையில் 20 வீதம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதோடு இதனை 60 முதல் 75 வீதம் வரை அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. மருந்து இறக்குமதிக்கு செலவிடும் பணத்தை சேமித்து உயர்தரத்திலான மருந்துகளை விநியோகிக்கவும் தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறது.(பா)

Mon, 04/20/2020 - 10:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை