அம்பா​றைையில் 39,969 குடும்பங்களுக்கு 19 கோடியே 98 இலட்சம் ரூபா ஒதுக்கீடு

கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக அம்பாரை மாவட்டத்தில் தொழிலை இழந்த 39,969 குடும்பங்களுக்காக 19 கோடியே 98 இலட்சத்தி 45 ஆயிரம் ரூபா அரசினால் ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டு வருவதாக அம்பாரை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்றாஸ் தெரிவித்தார்.

அம்பாரை மாவட்டத்தின் உள்ள சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இந்நடவடிக்கை சிறப்பாக முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இந்நடவடிக்கை நேற்று ஆரம்பமானது.

ஆலையடிவேம்பில் உள்ள இரு சமுர்த்தி வங்கிகளும் நேற்று காலை 6 மணிமுதல் திறக்கப்பட்டு நிதியை வழங்கும் பணியில் சுறுசுறுப்பாக ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது. இதேநேரம் சமுர்த்தி வங்கியினூடாக பணத்தினை பெற்றுக்கொண்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அப்பிரிவின் கிராம உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி சங்க தலைவிகளின் முன்னிலையில் கிராமங்களுக்கு சென்று பணத்தினை வழங்கி வருவதையும் காண முடிந்தது. இத்திட்டத்தினூடாக தொழில் பாதிப்புக்குள்ளான ஒவ்வொரு குடும்பமும் தலா ஜயாயிரம் ருபாவினை பெற்றுக்கொண்டதுடன் பணத்தை பெற்றுக்கொள்ளும்போது மக்கள் சமூக இடைவெளியை பேணியதுடன் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களையும் பின்பற்றினர்.

இதேநேரம் நிதியை பெற்றுக்கொண்ட மக்கள் அரசாங்கத்திற்கு நன்றியையும் தெரிவித்துக்கொண்டனர்.

இங்கு கருத்து தெரிவித்த ஒருவர் தொழிலை இழந்த எமக்கு அரசாங்கம் வழங்கும் இந்த நிதி பெரும் உதவியாக அமைந்துள்ளதுடன் இதனை பெற்றுக்கொடுத்த நாட்டின் ஜனாதிபதி மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

அத்தோடு சிரமத்தின் மத்தியில் வீடுகளுக்கு கொண்டு சென்று பணத்தை வழங்கிய அனைவருக்கும் சமுர்த்தி மற்றும் கிராம உத்தியோகத்தர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

இன்னுமொருவர் கருத்து தெரிவிக்கையில், அரசாங்கம் வழங்கிய இந்த நிதி மூலம் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

அத்தோடு இதனை பெற்றுக்கொடுக்க அர்ப்பணிப்போடு சேவையாற்றும் பிரதேச செயலாளர் உள்ளிட்டவர்களுக்கும் நன்றி கூறினார்.

வாச்சிக்குடா விஷேட நிருபர்

Tue, 04/21/2020 - 06:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை