வாகரையில் நீர்பாய்ச்சலின்றி வேளாண்மை செய்கை பாதிப்பு

வாகரை கிருமிச்சை ஓடை நீர்ப் பாசன திட்டத்தின் கீழ் விவசாயத்தில் ஈடுபட்டோர்களின் வேளாண்மை செய்கை, நீர்ப்பாய்ச்சலின்றி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கிருமிச்சை ஓடைக் குளத்தில் போதியளவு நீர் இருந்த போதிலும் நீர்விநியோகமானது உரிய நேரத்தில் வழங்காமை மற்றும் சிறந்த நீர்விநியோக முகாமைத்துவம் இல்லாத காரணத்தினால் பல ஏக்கர்  வயல் நிலங்கள் நீரின்றி வரண்டு காணப்படுவதாகவும் இந் நிலமை தொடர்ந்து நீடிக்குமானால் தமக்கு வேளாண்மை செய்கையினை கைவிட வேண்டிய நிலமை ஏற்படுமென தெரிவிக்கின்றனர். பிரதான வாய்க்காலில் நீர் குறைவாக திறக்கப்படுவதனால் ஏனைய வாய்க்கால்களில் ஊடாக செல்லும் நீர்விநியோகம் தடைப்படுள்ளது. இதனால் குறித்த வாய்க்கால்களின் மூலம் நீரினை பெற்று வேளாண்மை செய்கைப்பண்ணப்படும் வயல் பிரதேசம் நீரின்றி வரண்டு காணப்படுகிறது.

விநியோகப்படும் நீரினை பிரதான வாய்க்காலுக்கு அருகாமையில் உள்ள விவசாயிகள் போதியளவு பெற்றுள்ளனர். ஏனைய விவசாயிகளுக்கு குறித்த நீர்சென்றடைவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதுடன் நீர் சென்றடையவும் இல்லையெனவும் விவசாயிகளுக்கிடையிலே முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டு குழப்ப நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். குறித்த காலத்தில் வழங்கப்படும் நீர் வேளாண்மையின் பருவ வளர்ச்சிக்கு பொருத்தமானதாக இருக்கும் எனவும் தெரிவிக்கின்றனர்.

இவ் அவல நிலைமைக்கு தங்கள் பிரதேசத்திலுள்ள விவசாய அமைப்புக்களின் பொருத்தமற்ற நிர்வாக செயற்பாடே காரணம் என்றும் இவர்களின் இவ்வாறான செயற்பாடு பல தடவைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கின்றனர். எனவே இவ்விடயம் தொடர்பாக செங்கலடி  நீர்ப்பாசன திணைக்களம் முன்வந்து நிலைமையை சீர்செய்து விவசாயிகளை குறித்த ஆபத்தில் இருந்து காப்பாற்ற வேண்டுமென கோரிக்ைக விடுக்கப்படுகிறது.

பாசிக்குடா நிருபர்

Tue, 04/21/2020 - 07:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை