அதிஅபாய வலயங்களில் நிர்க்கதியாகியுள்ள மலையக இளைஞர்களுக்கு நிவாரணம்

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் அதிஅபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் நிர்க்கதியாகியுள்ள மலையக இளைஞர், யுவதிகளுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் நடவடிக்கையெடுத்துள்ளார்.

கொரோனா ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் விசேட அனுமதியுடன், கொரோனா வைரஸ் பாதுகாப்பு உடை அணிவித்து உடையை பயன்படுத்தும் மற்றும் ஏனைய பாதுகாப்பு பொறிமுறைகள் தொடர்பில் பயிற்சியளிக்கப்பட்டு குறித்த இடங்களில் நிர்க்கதியாகியுள்ள மலையக இளைஞர்களுக்கு நிவாரணம் நேற்றுமுன்தினம் அனுப்பிவைக்கப்பட்டது. இவ்வாறு நிவாரணத்தை கொண்டுசெல்பவர்களை நிவாரணத்தை உரிய பாதுகாப்பு பின்பற்றல்களுடன் கையளித்தப் பின்னர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படவும் நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு உட்பட வெளிமாவட்டங்களில் நிர்க்கதியாகியுள்ள மலையக இளைஞர், யுவதிகள் தமது சொந்த ஊர்களுக்கு திரும்பும்வரை மாற்று வழிமுறைகள் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

அதன் பிரகாரம் நிவாரணத்தை பெற்றுக்கொள்ள 3000இற்கும் அதிகமானோர் பதிவுசெய்துள்ள பின்புலத்தில் இவர்களுக்கான நிவாரணத்தை வழங்கும் பணி பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமானின் மேற்பார்வையில் இடம்பெற்று  வருகின்றது.

Mon, 04/20/2020 - 14:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை