பாடசாலைகளுக்கிடையிலான' பிக் மெச்' போட்டிகளுக்கு அனுசரணை வழங்கும் TVS

பாடசாலைகளுக்கு இடையேயான விளையாட்டுத் திறனை ஊக்குவிப்பதற்கும்,உலகம் முழுவதும் விரும்பப்படும் ஒருபுகழ்பெற்ற விளையாட்டில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கிலும் புகழ்பெற்ற பல்தேசிய ஓட்டோ மொமைபல் வர்த்தக நாமமான TVS புரட்சிகரமானமுயற்சியாக இலங்கையின் இரண்டு பாரிய கிரிக்கெட் போட்டிகளில் பங்காளராக இணைந்துள்ளது. மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட கிரிக்கட் போட்டியான தேஸ்டன் கல்லூரிக்கும் இசிப்பத்தானை கல்லூரிக்கும் இடையிலான சகோதரர்களின் சமர் மற்றும் தங்கங்களின் சமர் என வர்ணிக்கப்படும் மொரட்டுவ பிரின்ஸ் ஒவ் வேல்ஸ் கல்லூரிக்கும்,மொரட்டுவை சென்.செபஸ்டியன் கல்லூரிக்கும் இடையிலான போட்டிகளுக்கு அனுசரணையாளராக இணைந்து கொண்டதுடன்,ஒவ்வொரு போட்டியிலும் தொடரின் நாயகர்களுக்கு குறிப்பிடத்தக்க உலகத்தரம் வாய்ந்தமுன்னணிபைக் விளையாட்டுத் திறனை அங்கீகரிப்பதற்கான அடையாளமாக வழங்கப்பட்டன.

முன்னணி மாபெரும் சில்லறை ஓட்டோ மொபைல் நிறுவனமானது தேசிய அளவில் விளையாட்டுக்களுடன் பங்காளராக இணைந்துள்ளது, 2019ஆம் ஆண்டு இலங்கையின் பங்களாதேஷ் சுற்றுப் பயணத்துக்கு பிரதான அனுசரணை வழங்கியிருந்தது. ஒவ்வொருசர்வதேசஒருநாள் போட்டியிலும் போட்டியின் ஆட்டநாயகனுக்கு TVS பரிசுகளை வழங்கியிருந்தது. இதில் இலங்கையின் கிரிக்கெட் வீரர்களான அஞ்சலோ மத்யூஸ், குசல் ஜனித் மற்றும் விஷ்வா பெர்னான்டோ ஆகியோர் செல்லும் வழிச்செலுத்தல் இயக்கப்பட்ட தொழில்நுட்புத்துடன் கூடிய TVS NTORQ ஸ்கூட்டர்களைப் பெற்றுக்கொண்டனர். கிரிக்கட் யாம்பவமான் லசித் மலிங்கமற்றும் போட்டியின் தொடர் நாயகன் அஞ்சலோ மத்யூஸ் ஆகியோர் TVS Apache RTR 310 மோட்டார் சைக்கிள்களைப் பரிசாகப் பெற்றுக்கொண்டனர். வேகமான பந்து வீச்சாளர்களில் ஒருவரான லசித் மலிங்கவிடம் இருக்கும் சிறப்பைப் போன்று இந்தவகை மோட்டார் சைக்கிள் வேகம் மிக்கது என உலகளாவிய ரீதியில் கருதப்படுகிறது. அதுமாத்திரமன்றி இது ஆறு கியர்களைக் கொண்டதாகவும்,வேகத்தை பார்க்கக் கூடிய கட்டமைப்பைக் கொண்டதாகவும் அமைந்துள்ளது.

பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்ெகட் போட்டிகளுடன் TVS இணைந்து செயற்படுவதானது பாடசாலை மட்டத்தில் இளைஞர்களிடையே ஆர்வத்தையும் விளையாட்டுக்கான உந்துதலையும் ஊக்குவிக்கும் நடவடிக்கையின் ஓர் அம்சமாகும்.

1963ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திலிருந்து சகோதர்களுக்கிடையிலான சமர் மிகவும் எதிர்பர்க்கப்படும் கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படுவதுடன், இது நூற்றுக்கணக்கான விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் தற்போதைய,பழைய மாணவர்களை இணைக்கும் ஒருவிளையாட்டு நிகழ்வாகவும் மாறியுள்ளது. 2020ஆம் ஆண்டு சகோதரர்களின் சமரின் 57வது வருட நிகழ்வுஎன்பதுடன்,ஒருநாள் போட்டிகளின் 40வது வருட நிகழ்வாகும்.

1933ஆம் ஆண்டிலிருந்துதங்கங்களின் சமர் என்பது' பிக் மெச்'வரலாற்றில் மிகவும் எதிர்பார்ப்பைப் பெற்றபோட்டிநிகழ்ச்சியாகத் திகழ்ந்துவருகிறது. இந்தத் தொடரில் பிரின்ஸ் ஒவ் வேல்ஸ் கிரிக்கட் அணி கடந்த வருடங்களில் சென்.செபஸ்டியன் கல்லூரிக்கு எதிராக பலவெற்றிகளைப் பதிவுசெய்திருப்பதுடன்,பலபோட்டிகள் முடிவுகள் இன்றி சமமாக முடிந்துள்ளன. தேசியமட்டத்திலானகிரிக்கட் வீரர்களைஉருவாக்குவதற்குதங்கங்களின் சமர் புகழ்பெற்றுள்ளது. 2020ஆம் ஆண்டுதங்கங்களின் சமரின் 70வது வருடமாகவும்,ஒருநாள் போட்டியின் (50 ஓவர்கள்) 35வது வருடமாகவுமாகவும் அமைந்துள்ளது.

TVS Lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரவிலியனகே குறிப்பிடுகையில்,'இலங்கையின் பங்களாதேஷ் சுற்றுப்பயணத்துக்கு பிரதான அனுசரணை வழங்கியதன் ஊடாக,TVS ஆனது முக்கியமான விளையாட்டு நிகழ்வுகளுக்கு அனுசரணை வழங்கும் உலகளாவியரீதியில் அங்கீகாரம் பெற்ற நிறுவனம் என்ற காலடித்தடத்தைப் பதிவு செய்திருப்பதுடன்,நீண்டகாலமரியாதையைப் பெற்றகிரிக்கெட்டில் இணைந்திருப்பதன் ஊடாக சர்வதேசஅளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது.

TVS கோப்பை 2019 போட்டிகள் இலங்கை கிரிக்கெட் அணிக்கு வரலாறுபடைக்கும் போட்டியாகஅமைந்தது. சாதனைகளைப் பதிவுசெய்யமுடிந்ததுடன், 44 மாத தொடர் தோல்விக்கும் இலங்கை அணியினால் முற்றுப் புள்ளிவைக்க முடிந்தது. இது கூட்டாண்மைக்குக் கிடைத்த சிறந்த சான்றாக அமைந்தது. இந்தநேரத்தில் இலங்கையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இரண்டுபிக் மச் போட்களுக்கு அனுசரணை வழங்குவதன் மூலம் TVS பாடசாலைமட்டத்தில் கிரிக்கட் மீதான ஆர்வத்தை ஊக்குவிப்பதை குறிப்பாக இளையவர்களை ஊக்குவிப்பதைநோக்காகக் கொண்டுள்ளது'என்றார்.

புதியவர்த்தக அபிவிருத்தி மற்றும் TVS சந்தைப்படுத்தல் தலைமையதிகாரி உஷான் விஜேவர்த்தன கருத்துத் தெரிவிக்கையில்,'இலங்கையின் வருடாந்தபாடசாலைநாட்காட்டிகளில் மிகவும் பாரிய நிகழ்வுகளாக 'பிக் மெச்'போட்டிகள் காணப்படுகின்றன. ஸ்போட்டி ஸ்கூட்டர்கள் மற்றும் விளையாட்டுத் திறனை ஊக்குவிப்பதில் சிறப்பம்சத்தைக் கொண்டுள்ளதுஎன்றரீதியில் பங்குதாரராக இணைவதுவுஏளு இற்கேபொருத்தமாகஅமையும். உள்ள10ர் பிக் மச் போட்டிகள் இளம் விளையாட்டுஆர்வலர்களின் போட்டித் தன்மையைஊக்குவிப்பதற்கும்,வுஏளுவர்த்தகநாமங்கள் குறிக்கும் உந்துதலையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன' என்றார்.

Wed, 03/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை