பழைய மாணவர்கள் ஒழுங்கு செய்த கிரிக்கெட் போட்டி

கொழும்பு சாஹிராக் கல்லூரி 2008 ஆம் ஆண்டு வகுப்பு பழைய மாணவர்கள் ஒழுங்கு செய்த கிரிக்கெட் போட்டி கொழும்பு மலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் 16 அணிகள் பங்கு கொண்டன.

இறுதிப் போட்டியில் ஜி 2003 பி அணி வெற்றி பெற்றது. அணியின் தலைவர் மொஹமட் கலீல் பிரதம அதிதி சாஹிரா கல்லூரி ஆளுநர் சபை செயலாளர் அலவி முக்தாரிடமிருந்து பணப் பரிசு மற்றும் வெற்றிக் கிணத்தையும் பெற்றுக் கொண்டார்.

போட்டியின் சிறந்த பந்து வீச்சாளர் ஜி 2003 பி அணி எம்.அமீன், சிறந்த துடுப்பாட்ட வீரர் 2019 குழு ஆபித் நெளசாத் மற்றும் போட்டியின் வீரர் ஜி 2003 பி அணி எம். ஆசாம் ஆகியோருக்கு பழைய மாணவர் சங்க தலைவர் நைனா மொஹமட், செயலாளர் நுஸ்ரி மன்சூர் ஆகியோர் பரிசல்களை வழங்கினர். போட்டியின் பிரதான அனுசரணையாளர் கொன்னெக்ட் டெக்னாலஜிஸ் செயற்பாட்டுத் தலைவர் அப்துல் ரஹுமன், 2008 ஆம் ஆண்டின் வகுப்பு தலைவர் எஸ். முஹம்மத் பௌஸான், திட்டத் தலைவர்கள் நைம் லந்த்ரா, அப்துல் காஹிர் மற்றும் செயலாளர் அசாம் சகாப் ஆகியோர் போட்டியின் வெற்றியாளர்களுக்குத் தங்கப் பதக்கங்கள் மற்றும் விருதுகள் வழங்கி கௌரவித்தார்கள்.

ருசயிக் பாரூக்

Wed, 03/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை