கேட்வே பாடசாலையை வீழ்த்தி புனித ஜோசப் கல்லூரி சம்பியன்

கொழும்பு சாஹிரா கல்லூரி பழைய மாணவர் சங்கம் 15 ஆவது ஆண்டாகவும் ஏற்பாடு செய்த கால்பந்தாட்டப் தொடரின் இறுதிப் போட்டியில் கேட்வே சர்வதேச பாடசாலையை 1–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி புனித ஜோசப் கல்லூரி சம்பியன் பட்டத்தை வென்றது.

16 பாடசாலை அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு, குதிரைப்பந்தய திடல் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் பிரதான அனுசரணையாளர் டீடாட் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் தலைவர் ரமீஸ் ஷெரீப், புனித ஜோசப் கல்லூரி அணித்தலைவர் காவிந்த ரூபசிங்கவுக்கு 50,000 பணப் பரிசு மற்றும் சம்பியன் விருதையும் வழங்கினார்.

சாஹிரா கல்லூரி அதிபர் ரிஸ்வி மரிக்கர், ஆளுநர் சபை தலைவர் பவ்ஸுல் ஹமீத், செயலாளர் அலவி முக்தார், பழைய மாணவர் சங்க தலைவர் ரஸ்மி ரபீக், திட்டத் தலைவர் அரபாத் நிசாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ருசெயிக் பாரூக்

Mon, 03/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை