ஊக்கமருந்து விவகாரம்: குசல் பெரேராவுக்கு 500,000 டொலர் இழப்பீடு கிடைக்க வாய்ப்பு

இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் ஜனித் பெரேரா ஊக்கமருந்து பரிசோதனையில் தோல்வியுற்றதாக கூறி தவறாக இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் உலக ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் அவருக்கு இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த விவகாரத்தில் குசல் பெரேரா சார்பு சட்டத்தரணிகளும் உலக ஊக்கமருந்து தடுப்பு ஆணையத்தின் நிர்வாகிகளும் கலந்தாலோசித்து இறுதி முடிவுக்கு வருவார்கள் என தெரியவந்துள்ளது.

இதனால் இந்த விவகாரம் தொடர்பில் குசல் பெரேரா மேற்கொண்ட சட்டப் போராட்டத்திற்கான மொத்த செலவும், இழப்பீட்டு தொகையாக 500,000 டொலரும் வழங்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார் குசல் பெரேரா.

இந்த தொடருக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் குசல் பெரேரா தோல்வியுற்ற நிலையில், கட்டார் தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆய்வகம் ஒன்று இதை உறுதி செய்தது.

ஆனால் இந்த விவகாரத்தில் உண்மை நிலையை வெளிக்கொண்டுவர குசல் பெரேரா பாரிஸ் நகரத்தில் அமைந்துள்ள ஊக்கமருந்து தொடர்பான ஆய்வகத்தில் சோதனைக்கு உட்பட்டார்.

அந்த முடிவும் அவருக்கு சாதகமாக அமைந்த நிலையில், லண்டனில் மேலும் ஒரு சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

அதுவும் குசல் பெரேரா குற்றமற்றவர் என்பதை நிரூபித்துள்ள நிலையில், தற்போது இந்த விவகாரம் தொடர்பாக குசல் பெரேராவுக்கு ஏற்பட்ட சட்டப்போராட்டத்திற்கான மொத்த செலவு மட்டுமின்றி இழப்பீட்டு தொகையாக 500,000 டொலரும் வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Mon, 03/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை