ஈராக்கில் பிரதமரை நியமிப்பதில் இழுபறி

ஈராக் இடைக்கால பிரதமர் அப்தல் அப்துல் மஹ்தியின் அமைச்சரவைக்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளிக்காத நிலையில் அவர் அந்தப் பொறுப்பில் இருந்து விலகிக்கொண்டுள்ளார். தமது பெரும்பாலான உத்தியோகபூர்வ பணிகளை தொடர்ந்தும் முன்னெடுக்க முடியாது என்று குறிப்பிட்டிருக்கும் மஹ்தி டிசம்பரில் முன்கூட்டிய தேர்தலை நடத்தும்படி அழைப்பு விடுத்துள்ளார்.  

இந்நிலையில் பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட முஹமது அல்லாவி அதில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை விலகிக் கொண்டார். அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வழங்கப்பட்ட சீர்திருத்த வாக்குறுதிகளை அமுல்படுத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டுவதில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.  

எனினும் அடுத்த 15 தினங்களுக்குள் மற்றொரு பிரதமரை முன்மொழிவதாக ஜனாதிபதி பஹ்ராம் சலாஹ் அறிவித்துள்ளார். எண்ணெய் வளம் கொண்ட ஈராக்கில் நீடிக்கும் வேலையின்மை, ஊழல், மோசமான பொதுச் சேவைகளுக்கு எதிராக கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக ஈராக் மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Wed, 03/04/2020 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை