வாகனங்களில் உறங்கியிருந்த பயணிகளை தீவைத்து கொலை

வடகிழக்கு நைஜீரியாவில் இஸ்லாமியவாத ஆயுததாரிகள் என்று சந்தேகிக்கப்படுவோர் நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு பெண்கள் மற்றும் சிறுவர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

இரவுநேர நிறுத்தம் ஒன்றில் தமது வாகனங்களில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது தீமூட்டியதில் பயணிகளே பெரும்பாலும் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

போர்னோ மாநிலத்தின் பிரதான நெடுஞ்சாலையில் அவுனோ நகரிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றிருக்கும் இந்தத் தாக்குதலை தொடர்ந்து சம்பவ இடத்தில் கருகிய உடல்களை கண்டு அதிர்ச்சி அடைந்ததாக போர்னோ மாநில ஆளுநர் பபகானா சுலுத் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் கர்ப்பிணிப் பெண் ஒருவரும் அவரது குழந்தையும் இருப்பதாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

டிரக் வண்டிகளில் ஆயுதங்களுடன் வந்த தாக்குதல்தாரிகள் கொலை, தீமூட்டல் மற்றும் கொள்ளையில் ஈடுபட்டிருப்பதாக மாநில அரச பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதன்போது பெண்கள் மற்றும் சிறுவர்கள் கடத்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டபோதும் அது தொடர்பான எண்ணிக்கை வெளியிடப்படவில்லை.

இஸ்லாமியவாதக் குழுவான பொக்கோ ஹராம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அமைப்புகள் கடந்த 2009 தொடக்கம் நைஜீரியாவில் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றன. போராளிகள் வீழ்த்தப்பட்டதாக நைஜீரிய அரசு கூறுகின்றபோதும் அங்கு தொடர்ச்சியாக இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன.

Wed, 02/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை