விளையாடும் ஆஸி அணி அறிவிப்பு

தென்னாபிரிக்க அணிக்கெதிரான ஒருநாள், ரி-20 தொடர்:

தென்னாபிரிக்க அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் ரி-20 தொடரில் விளையாடும், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கடந்த வருடம் கிரிக்கெட்டிலிருந்து இடைக்கால ஓய்வினை பெற்றிருந்த சகலதுறை வீரர் கிளென் மேக்ஸ்வெல் மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.

இதனால் கிளென் மேக்ஸ்வெலுக்கு மாற்று வீரராக களமிறங்கிய அஸ்டன் டர்னர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதுதவிர விக்கெட்காப்பாளர் மெத்தியு வேட் மற்றும் சகலதுறை வீரரான மிட்செல் மார்ஷ் ஆகியோர் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஆர்ஸி ஷோர்ட் மற்றும் பீட்டர் ஹேண்ட்ஸ்கொம்ப் ஆகியோருக்கு பதிலாக, இவர்கள் அணியில் உள்வாங்கப்பட்டுள்ளனர். சீன் அபோட் மற்றும் ஜெய் ரிச்சர்ட்சன் ஆகியோரும் ரி-20 அணியில் இணைந்துள்ளனர்.

ஆரோன் பின்ஞ் தலைமையிலான அணியில், அஸ்டன் அகர், அலெக்ஸ் கெர்ரி, பெட் கம்மின்ஸ், ஜோஷ் ஹசில்வுட், மார்னஸ் லபுஸ்சகன், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், கேன் ரிச்சட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டாக், மெத்தியு வேட், டேவிட் வோர்னர், ஆடம் செம்பா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ரி-20 அணி

ஆரோன் பின்ஞ் தலைமையிலான அணியில், சீன் அபோட், அஸ்டன் அகர், அலெக்ஸ் கெர்ரி, பெட் கம்மின்ஸ், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஜெய் ரிச்சட்சன், கேன் ரிச்சட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டாக், மெத்தியு வேட், டேவிட் வோர்னர், ஆடம் செம்பா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த மாத இறுதியில் தென்னாபிரிக்காவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவுஸ்திரேலிய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடர்களில் விளையாடுகின்றது.

இதில் முதலாவதாக மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடர் நடைபெறுகின்றது. இதன் முதல் போட்டி எதிர்வரும் 21ஆம் திகதி ஜோகனஸ்பெர்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Wed, 02/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை