‘கொப்பி, பேஸ்ட்’ கண்டுபிடித்த கணினி விஞ்ஞானி காலமானார்

கணினியில் பரவலாக பயன்படுத்தப்படும் ‘கட்’, ‘கொப்பி’, ‘பேஸ்’ பிரயோகங்களை கண்டுபிடித்த அமெரிக்காவின் கணினி விஞ்ஞான முன்னோடிகளில் ஒருவரான லர்ரி டெஸ்லர் தனது 74 ஆவது வயதில் காலமானார்.

டெஸ்லரின் மரண அறிவித்தலை அவர் நீண்ட காலம் பணியாற்றிய எக்ஸ்ரோக்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த புதன்கிழமை வெளியிட்டது.

“அவரது புரட்சிகரமான கண்டுபிடிப்புகள் உங்களது அன்றாட வேலைகளை இலகுவாக்கியது. லர்ரி திங்கட்கிழமை உயிரிழந்தார். அவரை கொண்டாட எம்முடன் இணைந்துகொள்ளுங்கள்” என்று அந்த ட்விட்டர் பதிவில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்டான்ட்போர்ட் பல்கலைக்கழக பட்டதாரியான டெஸ்லர் மனிதன்– கணினி தொடர்பில் நிபுணராவர். அவர் அமேசன், ஆப்பிள், யாகூ நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார்.

பழமையான செம்மையாக்கல் நடைமுறையாக இருந்த அச்சிடப்பட்ட எழுத்துகளை வெட்டி தேவையான மற்றொரு இடத்தில் பொருத்தும் பாணியிலேயே கணினியில் கட் மற்றும் பேஸ்ட் பிரயோகத்தை அவர் கண்டுபிடித்துள்ளார்.

இந்த பிரயோகங்கள் ஆப்பில் சாதனங்களை பிரபலப்படுத்த உதவியது. இந்த மென்பொருள் 1983 இல் லிசா கணினிகளுக்கு ஒத்துழைக்காத நிலையிலேயே ஆப்பில் சாதனத்திற்கு பொருந்தியது.

கணினி அனைவருக்குமானது என்ற கலாசாரத்தை டெஸ்லர் உருவாக்கியதாக சிலிக்கான் பள்ளத்தாக்கின் கணினி வரலாற்று அருங்காட்சியகம் குறிப்பிட்டுள்ளது.

Fri, 02/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை