காசா எல்லையை ஒட்டி மதில் எழுப்பும் எகிப்து

எல்லையை ஒட்டி கொங்றீட் சுவர் எழுப்பும் நடவடிக்கையை எகிப்து ஆரம்பித்திருப்பதாக பாலஸ்தீன பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

காசாவின் தென்கிழக்கு முனையில் இருந்து காசா மற்றும் எகிப்துக்கு இடையிலான ஒரே நுழைவாயிலாக இருக்கும் ராபா வரை நீண்ட இந்தக் கட்டுபமானத்திற்கான பல டஜன் ஊழியர்களுடன் கிரேன்கள் எல்லையில் குவிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. எல்லையில் அமைக்கப்பட்டிருக்கும் தாழ்வான மற்றும் பழைய சுவர்களுக்கு பதிலே இந்த புதிய மதில் கட்டும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காசா மற்றும் எகிப்துக்கு இடையிலான கடத்தல் சுரங்கங்களை தடுக்கும் வகையில் நிலத்தடி கட்டுமானங்களும் அமைக்கப்படவிருப்பதாக கூறப்படுகிறது.

இந்தக் கட்டுமானம் தொடர்பில் கருத்து வெளியிட எகிப்து இராணுவம் மறுத்துள்ளது. முடியுமான விரைவில் (மதிலை) பூர்த்தி செய்யும் நோக்கில் இந்த கட்டுமானம் முன்னெடுக்கப்படுவதாக ஹமாஸ் பாதுகாப்பு வட்டாரம் குறிப்பிட்டுள்ளது.

“எல்லையை கட்டுப்படுத்துவது மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுப்பதே முக்கிய விடயமாகும்” என்று எகிப்து வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

Fri, 02/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை