Taekwondo தங்கப் பதக்கம் வென்ற ரனுக பிரபாத்துக்கு பீப்பள்ஸ் லீசிங் கௌரவிப்பு

பீப்பள்ஸ் லீசிங் நிறுவனம், தமது ஊழியர் எம்.பி.டி. ரனுக பிரபாத், தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் Taekwondo தங்கப் பதக்கம் வென்றமையை கௌரவித்திருந்தது.

இந்த கௌரவிப்பு நிகழ்வில் பீப்பள்ஸ் லீசிங் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பொது முகாமையாளருமான சப்ரி இப்ராஹிம் மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவ அங்கத்தவர்கள் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில், ரனுக பிரபாத் பெருமைக்குரிய விருதையும், பணப்பரிசையும் பீப்பள்ஸ் லீசிங் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பொது முகாமையாளருமான சப்ரி இப்ராஹிமிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

நேபாளம் காத்மண்டு நகரில் இடம்பெற்ற 13 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், Taekwondo போட்டியில் 23 வயதுக்குட்பட்ட ஆடவர் Pumse பிரிவில் இலங்கை சார்பில் போட்டியிட்டிருந்தார்.

இதில் ஆண்கள் தனிநபர், இரட்டையர் ஆகிய பிரிவுகளில் தங்கப் பதக்கங்களையும், குழுநிலை போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் ரனுக வெற்றியீட்டினார்.

தெற்காசிய போட்டிகளில் Taekwondo போட்டிகளில் இலங்கையைச் சேர்ந்த போட்டியாளர் ஒருவர் தங்கப் பதக்கம் வென்றமை இது முதலாவது சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.

பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பொது முகாமையாளருமான சப்ரி இப்ராஹிம் கருத்துத் தெரிவிக்கையில், 'நிதிச் சேவைகளை மக்களுக்கு வழங்குவதில் நாட்டின் முன்னணி நிறுவனம் எனும் வகையில், நிறுவனம் வழங்கி வரும் சேவைகளுக்காக பீப்பள்ஸ் லீசிங் தொடர்ச்சியாக பல கௌரவிப்புகளை பெற்றுள்ளது.

பீப்பள்ஸ் லீசிங் ஊழியரான ரனுக பிரபாத், இலங்கை சார்பாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, தங்கம் மற்றும் வெள்ளி விருதுகளை சுவீகரித்துள்ளமையினூடாக இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார். சர்வதேச மட்டத்தில் தெற்காசிய போட்டிகளில் பங்கேற்று வெற்றியீட்டியுள்ளமை, எமது நிறுவனத்துக்கும் பெருமை சேர்த்துள்ளது.' என்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 'சர்வதேச விளையாட்டு வீரர் எனும் வகையில் பீப்பள்ஸ் லீசிங் நிறுவனத்துக்கு பெருமை சேர்த்துள்ள ரனுக பிரபாத்தை நாம் கௌரவிக்கின்றோம். எதிர்காலத்தில் அவரின் விளையாட்டு நடவடிக்கைகளுக்கு நாம் தொடர்ந்து உதவிகளை வழங்குவதுடன், எமது நாட்டுக்கு அவர் மேலும் பல வெற்றிகளை பெற்றுக் கொடுக்க ஊக்குவிப்போம்.

அவரின் எதிர்காலத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன் மேலும் சிறப்பை எய்த ஊக்குவிப்போம்' என்றார்.

1996ம் ஆண்டு பீப்பள்ஸ் லீசிங் கம்பனி நிறுவப்பட்டது. இது இலங்கையின் மாபெரும் அரச வங்கியான மக்கள் வங்கியின் துணை நிறுவனமாகும்.

Tue, 01/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை