அகில இலங்கை கிரிக்கெட் போட்டி: யட்டியன வை.சீ.சீ கழகம் சம்பியன்

கெஹெலிய றம்புக்வெல்ல சவால் கேடயத்திற்காக ​அகில இலங்கை ரீதியில் இடம் பெற்ற அணிக்கு ஆறுபேர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் மினுவங்கொடை யட்டியன வை.சீ.சீ கழகம் முதலாம் இடத்தைப்பெற்று இரண்டு இலட்சம் ரூபா பணப் பரிசைப் பெற்றுக்கொண்டது.

கண்டி, மடவளை மதீனா தேசிய கல்லூரி மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இப்போட்டியில் இலங்கையின் பிரபல டெஸ்ட் கிரிக்கெட் வீரர் றமித் றம்புக்வெல்ல பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். நாடாளாவிய ரீதியில் மொத்தம் 46 அணிகள் இதில் பங்கு கொண்டன. இறுதிச் சுற்றுக்கு மினுவங்கொடை யட்டியன வை.சீ.சீ கழகமும் நீர்கொழும்பு ‘நிகம்பு லுக்ஸ்’ கழகமும் தெரிவாகின. அரை இறுதிப் போட்டியில் மினுவங்கொடை யட்டியன வை.சீ.சீ கழகம் திவுலபிட்டி எம்.எம்.சி கழகத்தை எதிர்த்தாடியது.

இதில் இரண்டு அணிகளும் தலா 28 ஓட்டங்ளைப் பெற்றதனால் சுப்பர் ஓவர் மூலம் முடிவு தீர்மானிக்கப்பட்டது. சுப்பர் ஓவரில் திவுலபிட்டி எம்.எம்.சி கழகம் 10 ஓட்டங்ளைப் பெற்றது. பதிலுக்கு ஆடிய யட்டியன வை.சீ.சீ கழகம் சுப்பர் ஓவரில் 22 ஓட்டங்ளைப் பெற்று வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவானது.

இப்போட்டியின் இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யட்டியன வை.சீ.சீ கழகம் 4 விக்கட்டுக்ளை இழந்து 48 ஓட்டங்ளைப் பெற்றது.

பதிலுக்கு ஆடிய நீர்கொழும்பு ‘நிகம்பு லுக்ஸ்’ கழகம் 43 ஓட்டங்ளை மட்டும் பெற்று இரண்டாம் இடத்தைப்பெற்றது. முதலாம் இடத்தைப் பெற்ற மினுவங்கொடை யட்டியன வை.சீ.சீ கழகத்திற்கு இரண்டு இலட்சம் ரூபா ரொக்கப் பரிசும் கெஹெலிய றம்புக்வெல்ல சம்பியன் சவால் கிண்ணம் வழங்கப்பட்டது.

இரண்டாம் இடத்தைப் பெற்ற ‘நிகம்பு லுக்ஸ்’ கழகத்திற்கு ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பரிசும் கேடயமும் வழங்கப்பட்டது. இது தவிர ஆட்டநாயகன், தொடரின் நாயகன் சிறந்த பந்து வீச்சாளர், சிறந்த துடுப்பாட்ட வீர்ர் ஆகியோருக்கும் இருபதாயிரம் மற்றும் பத்தாயிரம் ரூபா ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

‘கெண்டி லங்கா’ விளையாட்டுக்கழகம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. ஆட்ட நாயகன் மற்றும் தொடரின் நாயகன் விருது களையும் ரொக்கப் பரிசையும் யட்டியன வை.சீ.சீ கழகத்தைச் சேர்ந்த மொகமட் ரிகாஸ் பெற்றுக்கொண்டார். பெறுமளவு பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.

 (அக்குறணை குறூப் நிருபர் )

Tue, 01/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை