மருந்தாக்கல் கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் ரூமி சி.ஐ.டியினரால் கைது

வெள்ளை வான் ஊட கச் சந்திப்பு தொடர்பில் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்றுக் காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்த நிலையிலே கைது செய்யப்பட்டதாக சட்ட மா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார். வௌ்ளை வேன் ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட, இரு சந்கேநபர்களும் தங்களுக்கு ரூமி மொஹமத் தலா 10 இலட்சம் ரூபா வழங்கியதாக கூறியிருந்தனர். இந்த நிலையிலே அவரை கைது செய்து குறித்த வழக்கின் சந்தேகநபராகப் பெயரிட்டு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியிருந்தார்.

இதனை அடுத்து அவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.சந்தேக நபரை எதிர்வரும் 6 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு வெளிநாடு செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. (பா)

Wed, 01/01/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை