மத்திய கிழக்கிற்கு துருப்புக்களை அனுப்பும் செய்தி: அமெரிக்கா மறுப்பு

மத்திய கிழக்கிற்கு 14,000 துருப்புக்களை அனுப்புவதற்கு அமெரிக்கா தீர்மானதித்துள்ளது. இதில் யுத்தம் விமானம் தாங்கிய கப்பல்களும் அனுப்பப்படுமென அமெரிக்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நேசநாடுகள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தலைப் பாதுகாக்கவும் பாரசீகக் கடற்பரப்பில் வர்த்தக, இராணுவ சேவையில் ஈடுபடும் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் நோக்கிலும் இப்படைகள் அனுப்பப் படவுள்ளதாகவும் அந்தப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

சவூதி எண்ணெய்க் கிணறுகள்,விமான நிலையங்களில் தாக்குதல் நடத்தப்பட்டமை,மற்றும் அரபியன், பாரசீகக் கடலில் பயணித்த எண்ணெய்க்கப்பல்கள் மீதான தாக்குதலையடுத்தே இப்பிரேதசத்துக்கு இராணுவத்தை அனுப்ப அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

குறிப்பாக இப்பிரதேசத்திலுள்ள நாடுகள் எதிர்கொள்ளும் ஈரானின் அச்சுறுத்தல்கள், மிரட்டல்கைள முறியடிக்கும் பணியில் அமெரிக்கப்படைகள் இங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் அப்பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது.

எனினும் இச்செய்தியை நிராகரித்துள்ள வெள்ளை மாளிகை எவ்வித அடிப்படைகளும் இல்லாத செய்திகளை எவரும் நம்பத்தேவையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.அண்மையில் மத்திய கிழக்கில் ஈரானின் செயற்பாடுகள் ஏனைய நாடுகளை அச்சுறுத்தும் வகையில் அமைந்திருந்ததால் அங்குள்ள துருப்புக்களை அமெரிக்கா உஷார் நிலையில் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Fri, 12/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை