தென்கிழக்கு பல்கலைக் கழகத்தில் 8ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு

தென்கிழக்குப் பல்லைக்கழக கலை, கலாசார பீடத்தின் 8ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு நேற்றுமுன்தினம் (18) பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடைபெற்றது.

தென்கிழக்குப் பல்லைக்கழக கலை,கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் தென்கிழக்குப் பல்லைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

ஆய்வு மற்றும் புத்தாக்கத்தின் ஊடாக சமூதாய மேம்படுத்தல் எனும் கருப்பொருளில் நடைபெற்ற இம்மாநாட்டில் அமெரிக்காவின் சலிஸ்பரி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த கலாநிதி பேராசியர் கீதபொன்கலன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

தென்கிழக்குப் பல்லைக்கழக கலை, கலாசார பீடத்தின் 8ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு தொடர்பான நுாலின் முதல் பிரதியை பல்கலைக் கழக உபவேந்தர் எம்.எம்.எம்.நாஜீமிடமிருந்து பேராசியர் கீதபொன்கலன் பெற்றுக் கொண்டார்.

இதன்போது இலங்கை தென்கிழக்குப் பல்லைக்கழக கலை,கலாசார பீடத்தின் 8ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு தொடர்பான இணையத் தளமொன்றும் உபவேந்தரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இம்மாநாட்டில் இணைப்பாளரும் அரசியல் விஞ்ஞானத்துறை சிரேஷ்ட விரிவுரையாளருமான காலநிதி எம்.அப்துல் ஜப்பார் உட்பட பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், நுாலகர் உத்தியோகத்தர்கள் ஆய்வாளர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

(ஒலுவில் கிழக்கு தினகரன், பாலமுனை கிழக்கு தினகரன், அட்டாளைச்சேனை தினகரன் நிருபர்கள்)

Fri, 12/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை