ஹிட்லரின் பொருட்களை ஏலம் எடுத்த லெபனானிய வர்த்தகர்

ஜெர்மனியில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய ஏல விற்பனை ஒன்றில் நாஜித் தலைவர் அடல்ப் ஹிட்லர் பயன்படுத்திய பொருட்களை வாங்கிய லெபனான் வர்த்தகர் ஒருவர் அதனை இஸ்ரேலிய நிதி செகரிப்பாளர்களுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.

இந்தப் பொருட்கள் நவ நாஜிக்களின் பிரசாரங்களுக்கு பயன்படுத்தப்படுவதை தடுக்கவே அவைகளை வாங்கியதாக அல்துல்லா சாடிலா என்ற அந்த வர்த்தகர் குறிப்பிட்டுள்ளார்.

ஹிட்லர் அணிந்த தொப்பி உட்பட இந்தப் பொருட்களை இஸ்ரேலிய நிதி சேகரிப்பு அமைப்பான கெரென் ஹைரோட் என்ற நிறுவனத்திற்கு சுவிஸ் நாட்டைத் தளமாகக் கொண்ட அந்த வர்த்தகர் வழங்கியுள்ளார்.

இந்த ஏல விற்பனை குறித்து யூத அமைப்புகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்தன.

மியுனிச்சை தளமாகக் கொண்ட ஏல விற்பனையகத்தில் இடம்பெற்ற இந்த ஏலத்தில் ஹிட்லர் பயன்படுத்திய 10 பொருட்களை 600,000 யூரோ விலைகொடுத்து சாடிலா வாங்கினார்.

சுவிட்ஸர்லாந்தின் 300 பணக்காரர்களில் ஒருவரான அவர், ஐரோப்பாவில் யுூதர்கள் மீதான வெறுப்பு அதிகரித்து வருவதாகக் கூறுகிறார். அவர் ஏலம் எடுத்த பத்து பொருட்களில் ஹிட்லர் பயன்படுத்திய தட்டச்சு இயந்திரம், சிகரெட் பெட்டி மற்றும் ஹிட்லரின் சுயசரிதையான மெயின் கேம்ப் உள்ளிட்டவையும் அடங்கும்.

Wed, 11/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை