ஜெர்மனி டிரஸ்டன் அரண்மனை பெட்டகத்தை உடைத்து திருட்டு

ஐரோப்பாவின் மிகப்பெரிய பொக்கிசங்களின் சேகரிப்பான கிழக்கு ஜெர்மனியில் உள்ள டிரஸ்டன் அரண்மனையின் கிரீன் பெட்டகத்தை உடைத்து அரிய கலைப்பொருட்களை திருடர்கள் கொள்ளையிட்டுள்ளனர்.

அந்த பெட்டகத்தில் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்வேறு அரிய நகைகள், கலைப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் அந்த பெட்டகத்தை கடந்த திங்கள் அதிகாலை திருடர்கள் உடைத்து திறந்துள்ளனர். அங்கிருந்த பொருட்களில், எது திருடுபோனது என்பது தெரியவில்லை. அதேநேரத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த பத்திரிகை ஒன்று, ஒரு பில்லியன் யூரோ மதிப்புடைய நகைகள் உள்ளிட்டவை திருடு போய்விட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.

செக்சோனி பிராந்திய ஆட்சியாளர் அகஸ்டஸ் 1723 இல் இந்த புதையல் சேகரிப்புகளை உருவாக்கியதோடு இது உலகின் மிகப் பழைமையான அருங்காட்சியகங்களில் ஒன்றாகும்.

“10 வைரங்களில் மூன்று திருடப்பட்டுள்ளன” என்று ட்ரெஸ்டன் அருங்காட்சியக தலைவர் மரியோன் அக்கர்மான் குறிப்பிட்டுள்ளார்.

இதில் திருடப்பட்ட கிரீன் பெட்டகத்தில் மாணிக்கங்கள், மரகதங்கள் மற்றும் நீலமாணிக்கக்கற்களும் இருந்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் இந்த திருடர்கள் அருங்காட்சியத்தின் கீழ் தளத்தில் உள்ள இரும்பு ஜன்னல்களை அகற்றி, கண்ணாடிகளை உடைத்து திருடியுள்ளனர்.

இந்த அருங்காட்சியத்தில் இருக்கும் மிகவும் பெறுமதி மிக்க ஆபரணம் 41 கெரட் பச்சை மாணிக்கக்கல்லாகும். அது தற்போது நியூயோர்க்கில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

Wed, 11/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை