வெப்பநிலையை உயர்த்தும் அபாய வாயுக்கள் அதிகரிப்பு

உலகின் வெப்பநிலையை உயர்த்தும் அபாயகரமான வாயுக்கள் முன்னெப்போதும் காணாத அளவுக்கு அதிகரித்துள்ளன.

அதனால் நீண்டகாலம் நீடிக்கும் மோசமான பருவநிலை ஏற்படக்கூடும் என உலக வானிலை ஆய்வு அமைப்பு வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.

2005க்கும் 2015க்கும் இடைப்பட்ட காலத்தில் சுற்றுச்சூழலில் இருந்த அளவைவிட கடந்த ஈராண்டுகளில் கரியமிலவாயுவின் அளவு வெகுவாக உயர்ந்துள்ளது. பெட்ரோலியம், நிலக்கரி போன்ற படிவ எரிபொருளை எரிப்பதால், கரியமிலவாயுவின் அளவு உயர்கிறது.

மீத்தேன் வாயுவின் அளவும் 20 ஆண்டுகளில் காணாத அளவு உயர்ந்துள்ளது.

ஓஸோன் படலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் நைட்ரஸ் ஒக்சைட் வாயுவின் அளவே மிக அதிகமாய் உயர்ந்துள்ளது. அதனால் காற்று மண்டலத்தினுள் நுழையும் புற ஊதாக் கதிர்கள் மனிதர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

Wed, 11/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை