பொதுத் தேர்தலை நடத்துவதே மிக பொருத்தமானது

ஜனாதிபதித் தேர்தலில் நாம் வெற்றிபெற்றுள்ள சூழலில் பாராளுமன்றத் தேர்தல் ஒன்றை நடத்துவதே மிகவும் பொருத்தமாக அமையுமென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்-ஷ தெரிவித்தார்.

தனது 74ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு நாரஹேன்பிட்டிய அபேராம விகாரையில் நேற்று நடைபெற்ற மத வழிபாடுகளின் பின்னர் ஊடகங்ளுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

பல்வேறு அமைச்சர்கள் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளனர். அனைவரும் மக்கள் ஆணைக்கு மதிப்பளிக்க வேண்டும்.

ஐ.தே.கவின் அரசாங்கமே தற்போதுள்ளது. ஜனாதிபதி ஒரு கட்சியிலும், பிரதமர் ஒரு கட்சியிலும் இருந்து

செயற்பட முடியாது. இத்தருணத்தில் பாராளுமன்றத் தேர்தலொன்றை நடத்துவதே பொறுத்தமானதும் சிறந்ததுமாகும். மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து ஏனையவர்களும் பதவி விலகுவார்களென நம்புகின்றோம் என்றார்.

 

 

Tue, 11/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை