சஜித்தை தோற்கடிக்கும் ரணிலின் சூழ்ச்சிக்கு கூட்டமைப்பு துணைபோனது

சஜித் பிரேமதாசவை தோல்கடிக்கும் ரணில் விக்கிரமசிங்கவின் சூழ்ச்சிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு துணை போயுள்ளதாக சந்தேகம் உள்ளதென எம்.கே. சிவாஜிலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ்.பாடி விருந்தினர் விடுதியில் நேற்று (18) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குற்றஞ்சாட்டினார்.

தமிழ் மக்களி;ன் தேசிய பிரச்சினை தொடர்பில் எந்தவிதமான கருத்துக்களையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூறவில்லை. தமிழ் மக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தமிழ் மக்கள் மீது போர்க்குற்றங்களையும், இனப்படுகொலையையும் புரிந்த ஓர போர்க்குற்றவாளி, இனப்பிரச்சினைக்கு சரியான தீர்வு, பொறுப்புக்கூறல் மற்றும் நீதி கிடைக்கும் வரை கோட்டாபய ராஜபக்-ஷவிற்கு வாழ்த்துக் கூற முடியாது. கோட்டாபயவின் பதவிக் காலம் முடிந்தாலும் பரவாயில்லை. அவரின் வெற்றிக்காக தமிழ் மக்கள் வாழ்த்தக் கூடிய மனநிலையிலும் இல்லை. நானும் அந்த மனநிலையில் இல்லை.

சம்பிரதாயம் என வாழ்த்துவதும், அதன் பின்னர், வீழ்வதும், ஓடுவதுமாக இருந்து கொண்டு வாழ்த்த முடியாது. இன்னுமொரு விடயத்தை தெளிவாக கூற விரும்புகின்றோம்.

ஜனாதிபதி, ருவன்வெளிசாயவைத் தரிசித்ததுடன் மகாநாயக்க தேரர்களின் ஆசியையும் பெற்றுக்கொண்டனர்.

அதனையடுத்து புனித பூமியில் சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.

ஜனாதிபதியின் செயலாளர் உதய செனவிரத்ன சத்தியப்பிரமாணத்திற்கான உத்தியோகபூர்வ ஆவணத்தை வாசித்தளித்ததையடுத்து கோட்டாபய ராஜபக்ஷ தமது சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்டார்.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்வுக்காக அநுராதபுர நகரில் புதிய ஜனாதிபதியின் புகைப்படம் தாங்கிய கட்அவுட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன் தேசியக் கொடிகள் அப்பிரதேசமெங்கும் பறக்கவிடப்பட்டிருந்தன.

சத்தியப் பிரமாண நிகழ்வையடுத்து பிரதமர், சபாநாயகர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் புதிய ஜனாதிபதிக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

ருவன்வெலிசாயவைத் தரிசிக்க வருகை தந்த மக்களுடனும் ஜனாதிபதி அளவளவாவினார்.

சத்தியப் பிரமாண நிகழ்வின் போது அனைவரும் கரங்களைத் தட்டி தமது மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டனர்.

(யாழ்ப்பாணம் குறூப் நிருபர்)

Tue, 11/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை