மலேசியாவிடமிருந்து குப்பைகளை திரும்பப் பெற பிரிட்டன் ஒப்புதல்

மலேசியாவுக்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்பட்ட 42 பிளாஸ்டிக் குப்பை கொள்கலன்களை திரும்பப் பெறுவதற்கு பிரிட்டன் இணங்கியுள்ளது. பல ஆசிய நாடுகளும் இவ்வாறான குப்பைகள் தமது நாடுகளுக்கு வந்தடைவதை தடுப்பதற்கு போராடி வருகின்றன.

சீனா தனது மறுசுழற்சித் தொழிற்துறையை நிறுத்தி அதற்கான இறக்குமதிகளை நிறுத்தியதை அடுத்து அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற வளர்ந்த நாடுகளின் பிளாஸ்டிக் மற்றும் ஏனைய குப்பைகள் தென்கிழக்கு ஆசிய நாடுகளை நோக்கி வர ஆரம்பித்துள்ளன.

தடை அமுலுக்கு வந்ததை அடுத்து சீனாவின் மல மறுசுழற்சி வர்த்தகங்கள் மலேசியாவுக்கு மாறியுள்ளன. இதனால் நாட்டுக்குள் வர ஆரம்பித்த குப்பைகளை திருப்பி அனுப்புவதில் அரசாங்கம் போராடி வருகிறது.

Tue, 11/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை