கொங்கோ விமான விபத்து: உயிரிழப்பு 29 ஆக உயர்வு

மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசில் சிறிய வகை பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் இதுவரை 29 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

விமானம் விபத்துக்குள்ளானபோது அதில் 19 பேர் இருந்ததாகவும், பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் அது விழுந்ததால் கீழே இருந்தவர்களும் இந்த விபத்தில் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கோமா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சிறிது நேரத்தில் விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

Tue, 11/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை