அட்டாளைச்சேனை இக்ராஹ் வித்தியாலயத்தில் மாணவர்களின் உடற் தகுதிகாண் பரிசோதனை

அட்டாளைச்சேனை இக்ராஹ் வித்தியாலயத்தில், தரம் 04 மற்றும் 05 வகுப்புக்களில் கல்வி பயிலும் மாணவர்களின் உடற் தகைமையைப் பரிசீலனை செய்து அவர்களை பொருத்தமான விளையாட்டுத் துறைக்கு தெரிவு செய்யும் உடற் தகுதிகாண் பரிசோதனை நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.றஹ்மத்துல்லா ஹ்வின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் பேரில், அக்கரைப்பற்று கல்வி வலய பாடசாலை விளையாட்டு விருத்தி இணைப்பாளர் ஏ.எல்.பாயிஸ் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தார்.

நிகழ்வில், மாணவர்களின் உடற் தகைமை பரிசீலனை மேற்கொள்வதன்; அவசியமும், அதன் நன்மைகளும் எனும் தலைப்பில் உதவிக் கல்விப் பணிப்பாளர் (ஆரம்பக் கல்வி) எஸ்.அம்ஜத்கான் விளக்கமளித்தார். அம்பாறை மாவட்ட மெய்வல்லுநர் பயிற்றுவிப்பாளர் எஸ்.எல்.தாஜூடீன் தலைமையில், உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் எம்.எச்.ஹம்மாத், உடற்கல்வி ஆசிரியர்கள் ஜே.பஸ்மிர், ஐ.எல்.எம்.பாயிஸ், எம்.எம்.முபீர், ஏ.எச்.தபரானி, ஆர்.ஹாறூன், வை.ஏ.வாஜித் ஆகியோர் மாணவர்களுக்கான பரிசோதனை மற்றும் பயிற்சியை மேற்கொண்டனர்.

அட்டாளைச்சேனை இக்ராஹ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் சுமார் 120 மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை பாடசாலை அதிபர் ஏ.எல்.யாசீன் மேற்கொண்டிருந்தார்.

 

(அட்டாளைச்சேனை மத்திய நிருபர்)

Tue, 11/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை