சமூக வலைத்தளங்களின் வசதிக்கு விரைவில் விசேட ஊடகப் பிரிவு

ஊடக சுதந்திரத்துக்கும் உத்தரவாதம்

நாட்டின் ஊடக சுதந்திரத்துக்கு உத்தரவாதமளிக்கும் அதேநேரம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகள் யாவற்றையும் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் நிறைவேற்றுவோமென தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நேற்று தெரிவித்தார். இராஜாங்க அமைச்சராக நேற்று தனது பதவிகளை பொறுப்பேற்றுக்ெகாண்ட அவர் தகவல் திணைக்களத்தில் நடத்திய முதலாவது செய்தியாளர் மாநாட்டிலேயே இவ்வாறு கூறினார்.

ஊடக நிறுவனங்களின் தரத்தையும் பிரபல்யத்தையும் ஊக்குவிக்கும் வகையில் அவற்றுக்கு பொருத்தமான நபர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும் இந்த அரசாங்கம் வெறுப்புணர்வை வளர்க்கக்கூடிய அரசியல் நடத்தாது என்றும் ஊடக நிறுவனங்களையும் ஊடகவியலாளர்களையும் எவ்வித நெருக்கடிக்கும் உள்ளாக்காது என்றும் அவர் உத்தரவாதம் அளித்தார்.

அதேநேரம் ஊடக தர்மத்தை பின்பற்ற வேண்டிய கடமை ஊடக நிறுவனங்களுக்கு உண்டு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் சமூக வலைத்தளங்களின் வசதிக்காக தகவல் திணைக்களத்தில் விசேட ஊடக பிரிவு ஒன்று வெகுவிரைவில் ஸ்தாபிக்கப்படுமென்றும் அவர் கூறினார். சமூக வலைத்தளங்கள் பலம் படைத்தவை என்கின்றபோதும் அவற்றின் தரம் உயர்த்தப்படவில்லையென்றும் அவர் குறிப்பிட்டார். அதனால் அவற்றின் தரத்தை உயர்த்தி ஊடக தர்மத்தை முறையாக நெறிப்படுத்துவது இப்பிரிவின் மூலம் உறுதி செய்யப்படுமென்றும் அவர் கூறினார்.

 

Sat, 11/30/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக