மூதூர் கல்வி வலயம் 04 பிரிவுகளில் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு

மாகாண மட்ட சிறுவர் மெய்வல்லுநர் விளையாட்டு போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடி மூதூர் கல்வி வலயம் 04 பிரிவுகளில் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இப் போட்டி கடந்த 19-20/10.2019 ஆம் திகதிகளில் அட்டாளைச்சேனை அஷ்ரஃப் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது,

இவ்விளையாட்டுப் போட்டியில் கிழக்கு மாகாணத்தில் 17 வலயங்களில் மூதூர் கல்வி வலயத்தை தவிர 16 வலயங்கள் சுமார் 6 வருட காலமாக நடைபெற்று வந்துள்ளது.

ஆனால் மூதூர் வலயம் நடாத்தாமல் இருந்த நிலையில் தற்போதைய வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம் ஹாசீம் இதனை கட்டாயம் நடாத்த வேண்டும் என்ற விடா முயற்சியினாலும் இதன் வலய இணைப்பாளர் ஆர்.சர்றாஜினால் வரலாற்றில் முதற்தடவையாக மூதூரில் கோட்ட ரீதியாக போட்டிகள் நடாத்தப்பட்டு பின்னர் வலயப் போட்டிகளும் நடாத்தி மாகாண மட்டத்தில் கடந்த 19-20/10/2019 ஆம் திகதிகளில் நடாந்த போட்டியில் பங்குபற்றி 9 பிரிவுகளில் பங்கு பற்றி 4 பிரிவுகளில் மூதூர் கல்வி வலய பாடசாலைகளான தி/மூதூர்/ஸாஹிரா வித்தியாலயம் ( இரண்டு பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்டது), தி/மூதூர்/ அஸ்ரஃப் வித்தியாலயம், தி/மூதூர்/தாருல் ஜன்னாஹ் வித்தியாலயம் ஆகியன தேசிய மட்டத்திற்கு தெரிவானது கிழக்கு மாகாணத்தில் பல வலயங்களில் ஒரு பிரிவில் கூட தெரிவு செய்யப்படாத மூதூர் கல்வி வலயம் 9 பிரிவுகளில் 4 பிரிவில் தெரிவு செய்யப்பட்டது பாராட்டத்தக்கது எனவும் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஹாசீம் தெரிவித்தார்.

திருமலை மாவட்ட விசேட நிருபர்

Mon, 11/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை