பாடசாலை கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த பந்துவீசும் 16 இயந்திரங்கள் விநியோகம்

பாடசாலை கிரிக்கெட்டை உயர்ந்த தரத்துக்கு கொண்டு வருவதற்காக அடிப்படை வசதிகளை அதிகரிக்கும் திட்டத்தின் கீழ் பந்து வீசும் 16 இயந்திரங்கள் (Bowling Machine) 19 வயதுக்கு கீழ் கிரிக்கெட் விளையாடும் முதன்மையான பாடசாலைகளுக்கு வழங்க இலங்கை கிரிக்கெட் நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் தலைவர் சம்மி சில்வாவின் கருத்தின்படி மேற்கொள்ளப்பட்ட இத்திட்டத்தின் கீழ் இலங்கையின் முன்னணி பாடசாலை போட்டிகளில் பிரதிநிதித்துவம் செய்யும் 16 பாடசாலைகளுக்கு அவ்வியந்திரங்கள் வழங்கப்பட்டன. எதிர்காலத்தில் முதல் தர போட்டிகளில் விளையாடும் 36 பாடசாலைகளுக்கும் அவற்றை வழங்க வெகு விரைவில் வழங்க கிரிக்கெட் நடவடிக்கை எடுத்துள்ளது.

சாதாரண பந்து வீசும் இயந்திரங்கள் மின்சாரத்தினால் இயக்கப்படுகின்றன. ஆனால் இவை மின்கலங்கள் மூலமே செயற்படுத்தப்படுகின்றன. மூன்று மணித்தியாலங்கள் தொடர்ந்து செயற்படும் மின்கலன்களை மீண்டும் முன்னேற்றம் செய்யலாம். அதனால் மின்சார வயர்கள் இன்றி இதனை பாவிக்கக்கூடிய சாத்தியமுள்ளது.

ஆறு இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபா பெறுமதியான மின்னேற்றக்கூடிய இவ் இயந்திரங்கள் இலங்ககைக்கு முதன் முறையாக கொண்டு வரப்பட்டுள்ளது.

இவ்வியந்திரங்கள் இலங்கை கிரிக்கெட் தலைவர் சம்மி சில்வா தலைமையில் கிரிக்கெட் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாடசாலை கிரிக்கெட் சபையின் தலைவர் ஓஸாரா பண்டித ரத்னவும் குறிப்பிட்ட படசாலைகளின் அதிபர்களும் கலந்து கொண்டார்கள்.

Mon, 11/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை