SLT Speedup சவாரி வெற்றிகரமாக நிறைவு

இலங்கையின் நீண்ட சைக்கிளோட்ட போட்டியான SLT Speedup சவாரி கடந்த 28 ம் திகதி தம்புள்ளையில் நிறைவு பெற்றது.ஆண்களுக்கான இறுதிப் போட்டி திருகோணமலையில் ஆரம்பமான போட்டி கந்தளாய் ,ஹபரண இனாமலுவ ஊடாக தம்புள்ளையில் நிறைவடைந்தது.

5 ம் நாள் போட்டியில் இலங்கை விமானப்படையின் ஜீவன் ஜயசிங்க முதலிடத்தை பெற்றார்.இரண்டாமிடத்தை பசிந்து ஜயசிங்க இலங்கை கடற்படை பெற்றார்.மூன்றாமிடத்தை இலங்கை விமானப்படையைச் சேர்ந்த மதுசங்க பெர்னாண்டோ தெரிவானார்.

அத்துடன் பெண்களுக்கான போட்டி குருநாகலில் ஆரம்பமான போட்டி மெல்சிரிபுர,கலேவல ஊடாக தம்புள்ளையை வந்தடைந்தது.

இந்த போட்டி இரண்டு நாட்கள் இடம்பெற்றது, அதில் வெற்றியாளராக இலங்கை விமானப் படையைச் சேர்ந்த தினேஷா டில்ருக்சி தெரிவானார்.இரண்டாமிடத்தை யூ.என் குமார சிங்க இலங்கை இராணும்,மூன்றாவிடத்தை டில்கானி இலங்கை இராணுவம் பெற்றார்.

இலங்கை சைக்கிளோட்ட வரலாற்றில் முதற் தடவையாக தம்புள்ளையில் ஆரம்பமான இந்த போட்டி கெக்கிராவ,ஹபரண ஊடாக மீண்டும் தம்புள்ளையை வந்தடைந்தது.

இதில் வெற்றியாளராக ஸ்டேபிமிள் சைக்கிளிங் கழகத்தைச் சேர்ந்த டில்மினி தெரிவானார். இரண்டாமிடத்தை குமாரசிங்கவும் மூன்றாமிடத்தை கேஷான் மதுரங்கவும் வெற்றி பெற்றுள்ளார்.

வெற்றி பெற்றவர்களுக்கு SLT குழும தலைவர் குமாரசிங்க சிரிசேன கிண்ணங்களை வழங்கிவைத்தார்.

Tue, 10/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை