ஆண்கள், பெண்கள் பயிலுநர், இடைநிலை மேசைப் பந்து போட்டிகள்

அகில இலங்கை திறந்த தர வரிசை

887 போட்டியாளர்களுடன் கல்கிஸ்ஸை சென் -தோமஸ் உள்ளக விளையாட்டரங்கில் GSM மேசைப் பந்து போட்டிகள் கடந்த 12, 13 மற்றும் 14ம் திகதிகளில் இடம்பெற்றது. இந்தப் போட்டிகளில் பிரதம அதிதியாக லெப்டினன் கேனல் நலீன் ஹேரத் மற்றும் அவரது துணைவியாரும் கலந்து கொண்டதோடு, விஷேட அதிதியாக தேசிய வருமானத் திணைக்களத்தின் காலி கிளையின் பிரதி ஆணையாளர் பிரதீப் த. சில்வா மற்றும் நெஸ்டர் வேர்க்ஸ் நிறுவனத்தின் தலைவர் திருமதி நிபுணிகா வருஷவிதான ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். திறந்த ஆண்களுக்கான போட்டியின் வெற்றிக் கிண்ணத்தை மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் வருஷவிதான வெற்றி கொண்டதோடு, திறந்த பெண்களுக்கான வெற்றிக் கிண்ணத்தை இலங்கை துறைமுக அதிகார சபையின் இஷாரா மதுரங்கி வெற்றி கொண்டார்.

போட்டி முடிவுகள் வருமாறு,

8 வயதின் கீழ் பெண்கள் பிரிவில் தர்மாசோக வித்தியாலய மாணவி கே.எஸ்.டி.சனுகி ஆக்ஸனா, விஹாரமகாதேவி வித்தியாலய மாணவி காவிந்தி ஹேரத்தை தோற்கடித்து சம்பியனாகத் தெரிவானார். (11/9, 11/7)

8 வயதின் கீழ் ஆண்கள் பிரிவில்

ஆனந்த கல்லூரியின் மாணவன் றுசத் மத்விந்து, வித்யார்த்த கல்லூரி மாணவன் யசங்க றுமேசிதவைத் தோற்கடித்து சம்பியனாகத் தெரிவானார். (11/13, 11/4, 11/3)

10 வயதின் கீழ் பெண்கள் பிரிவில் கண்டி குட்செட் கொண்வென்ட் மாணவி சமந்தி வீரசூரிய, காலி சர்வதேச கல்லூரி மாணவி துலணி கொடகந்தவைத் தோற்கடித்து செம்பியனாகத் தெரிவானார். (7/11, 11/8, 11/8)

10 வயதின் கீழ் ஆண்கள் பிரிவில் றோயல் கல்லூரி மாணவன் அக்கில் லக்திவ், வித்தியார்த்த கல்லூரியின் மாணவன் அகஸ்த்ய ஆனந்திதவைத் தோற்கடித்து சம்பியனாகத் தெரிவானார். (12/14, 11/2, 11/8)

12 வயதின் கீழ் பெண்கள் பிரிவில் தேவானந்தா கல்லூரியின் மாணவி சினெத்மி தெசன்யா, மஹாமாய வித்தியாலயத்தின் மாணவி மெத்னதீ குமாரசிங்கவைத் தோற்கடித்து சம்பியனாகத் தெரிவானார். (11/3, 11/8)

12 வயதின் கீழ் ஆண்கள் பிரிவில் றோயல் கல்லூரியின் மாணவன் ஜனித் பட்டுகெதர, தர்மராஜா வித்தியாலயத்தின் மாணவன் செனுல் ரத்நாயக்காவைத் தோற்கடித்து சம்பியனாகத் தெரிவானார். (11/8, 12/10)

15 வயதின் கீழ் பெண்கள் பிரிவில் ஜீ.டீ.டி.டி.ஏ ஹசனி லியனகே, மஹாமாயா கல்லுரியின் மாணவி ஸீ. தொடம்மகவைத் தோற்கடித்து சம்பியனாகத் தெரிவானார். (13/11, 11/7)

15 வயதின் கீழ் ஆண்கள் பிரிவில் றோயல் கல்லூரி மாணவன் ஜனித் பட்டுகெதர, அல்வூத் சர்வதேச பாடசாலையின் மாணவன் ஸெயிட் அப்துல்லாவைத் தோற்கடித்து சம்பியனாகத் தெரிவானார். (11/8, 11/8)

18 வயதின் கீழ் பெண்கள் பிரிவில் மியுசியஸ் கல்லூரியின் மாணவி ஷெனாலி மெண்டிஸ், ஹொலிகுரோஸ் வித்தியாலயத்தின் மாணவி சமல்ஷா தெவ்மியைத் தோற்கடித்து சம்பியனாகத் தெரிவானார். (11/7, 10/12, 11/7)

18 வயதின் கீழ் ஆண்கள் பிரிவில் தர்மாசோக வித்தியாலய மாணவன் கெசந்து பீரிஸ், கிங்ஸ்வூட் கல்லூரியின் மாணவன் எஸ். நவரத்னவைத் தோற்கடித்து சம்பியனாகத் தெரிவானார். (11/6, 14/12)

பயிலுநர் பெண்கள் பிரிவில் மியுசியஸ் கல்லூரியின் மாணவி ஷெனாலி மெண்டிஸ், மஹாமாய கல்லூரியின் மாணவி இந்துபிரபா ரத்நாயக்காவைத் தோற்கடித்து சம்பியனாகத் தெரிவானார். (7/11, 11/9, 11/9)

பயிலுனர் ஆண்கள் பிரிவில் கேகளு வித்தியாலய மாணவன் மத்தீஷ விக்ரமநாயக்கா, வித்யார்த்த கல்லூரி மாணவன் நுவன் சாமரவைத் தோற்கடித்து சம்பியனாகத் தெரிவானார். (11/4, 11/5)

இடைநிலை பெண்கள் பிரிவில் கேகளு வித்தியாலய மாணவி நவிந்தி செனவிரத்ன, மஹாமாய கல்லூரி மாணவி ஹஷனி இக்கிரியவத்தவைத் தோற்கடித்து சம்பியனாகத் தெரிவானார். (11/8, 11/7)

இடைநிலை ஆண்கள் பிரிவில் கிங்ஸ்வூட் கல்லூரி மாணவன் ரஸந்து ஜயசுந்தர, லைசியம் சர்வதேச பாடசாலை மாணவன் தெவ்மின் வீரசேனவைத் தோற்கடித்து சம்பியனாகத் தெரிவானார். (11/8, 12/10)

திறந்த தரவரிசை பெண்கள் பிரிவில் இலங்கை துறைமுக அதிகார சபையைச் சேர்ந்த இஷாரா மதுரங்கி, மகளிர் கல்லூரி மாணவி அயலா சிந்தியைத் தோற்கடித்து சம்பியனாகத் தெரிவானார். (11/7, 11/6, 11/8, 11/9)

திறந்த தரவரிசை ஆண்கள் பிரிவில் மொரட்டுவை பல்கலைக்கழக மாணவன் சுபுண வருஷவிதான, வித்தியார்த்த கல்லூரியின் மாணவன் கிரிஷான் விக்ரமரத்னவைத் தோற்கடித்து சம்பியனாகத் தெரிவானார். (11/9, 11/4, 6/11, 11/7, 5/11, 8/11, 11/5)

(புத்தளம் விஷேட நிருபர்)

Tue, 10/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை