முருங்கன் பொலிஸ் நிலையம் வடமாகாண ஆளுநரால் திறப்பு

மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில் அமைக்கப்பட்ட புதிய முருங்கன் பொலிஸ் நிலையம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தலைமையில் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

தற்காலிகமாக இயங்கி வந்த முருங்கன் பொலிஸ் நிலையத்திற்கான நிரந்தர கட்டடம் 5 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.இதற்கென பொலிஸ் திணைக்களம் 4.5 மில்லியன் ரூபாவை ஒதுக்கியது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கலந்து கொண்டதுடன் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி விஜய குணவர்த்தன, வன்னி பிராந்திய பொலிஸ்மா அதிபர் அனுர அபய விக்ரம மற்றும் மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்க உட்பட மன்னார் மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மற்றும் பொலிஸ் திணைக்கள உத்தியோகஸ்தர்கள், பொது மக்களும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் அவர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடதக்கது.

மன்னார் குறூப் நிருபர்

Thu, 10/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை