கோட்டாபயவிடம் சாட்சியம் பெறும் இடைக்கால தடை நீடிப்பு

டீ.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியகத்தின் நிர்மாணம் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அறுவர் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கையை ஆரம்பிக்க வேண்டாம் என்று ஏற்கனவே வழங்கியிருந்த இடைக்கால தடை உத்தரவினை எதிர்வரும் டிசம்பர் 10ம் திகதி வரை மேலும் நீடித்தது உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.  

உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் புவனேக அலுவிகாரை, முர்கு பெர்னாண்டோ மற்றும் ஈ.ஏ.ஜி.ஆர். அமரசேகர ஆகி யோர் இந்த உத்தரவை பிறப்பித்தனர். டீ.ஏ.ராஜபக்ஷ அருங்காட்சியகத்தை நிர்மாணிப்பதற்கு பொது மக்கள் நிதியில் இருந்து 33.9மில்லியன் ரூபாவை பயன்படுத்தியதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன், காணி சீராக்கல் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களான பிரசாத் ஹர்ஸன் டி சில்வா, பத்ரா உடலவத்தி கமலதாச, சுத்மமீஜா கெமித்த ஆட்டகல, சமன்குமார ஒபிரஹாம் கலப்பத்தி, தேவகே மஹிந்த சாலிய மற்றும் ஸ்ரீமதி மல்லிகா, குமாரி சேனாதீர ஆகியோர் மீது சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.

இதேவேளை இந்த வழக்கை எதிர்வரும் அக்டோபர் 15ம் திகதி முதல் கொழும்பு நிரந்தர நீதாய நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றம் முன்னர் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sat, 10/12/2019 - 08:56


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை