அது ஷாபி அல்ல; இஷாக் எம்.பி.

காலிமுகத்திடலில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதலாவது ஆதரவு கூட்டத்துக்கு சர்ச்சைக்குரிய குருநாகல் டாக்டர் ஷாபி வந்திருந்ததைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையில்  

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, அடிப்படை எதுவும் அற்ற வகையிலான போலி பிரசாரத்தை மேற்கொண்டுள்ளமை கண்டிக்கத்தக்கது என்று அனுராதபுர மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் கூறியுள்ளார். மேற்படி கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த தனது முகத்துக்கு பதிலாக டாக்டர் ஷாபியின் முகத்தை மாற்றியமைத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் படங்களை போலியாக வெளியிட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.

சஜித் பிரேமதாசவின் மேற்படி கூட்டத்துக்கு நான் பங்கேற்றிருந்தேன். ஆனால் டாக்டர் ஷாபி அந்த கூட்டத்துக்கு வரவில்லை. அவ்வாறு பிரசாரப்படுத்துவது போலியானதாகும். 2015 இல் நான் அநுராதபுர மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளேன். எனது தந்தையும் நானும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளோம். எனது குடும்பத்தில் ஒரே பிள்ளையாக நான் இருக்கிறேன். நான் மக்களுக்காக சேவை செய்ய வந்திருக்கிறேனே தவிர இருக்கையை சூடாக்கிவிட்டு வீட்டுக்குச் செல்ல அல்ல. ஒரு பாராளுமன்ற பிரதிநிதி என்ற வகையில் நான் மக்களுடன் முழுமையான சேவையாளனாக இருக்கவே விரும்புகிறேன் என்று கூறும் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான், எவரது ஒழுக்கத்துக்கும் மாசு கற்பிக்க வேண்டாம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அரசியல்வாதிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.

Sat, 10/12/2019 - 08:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை