கன்னர்ஸ் சுப்பர் குறொஸில் சியெட் அணியின் முக்கிய வீரர்கள் பிரகாசிப்பு

இலங்கையின் ஆட்லறிபடைப்பிரிவின் கன்னர்ஸ் சுப்பர்குறொஸ் பந்தயத்தில் சியெட் அணியின் பந்தய அணி மிகச்சிறப்பாகப் பிரகாசித்து,முதல் 3 இடங்களுக்குள் 10 முடிவுகளைப் பெற்றுக்கொண்டது. இதில் முக்கியமாக,சியெட் அணியைச் சேர்ந்த மூன்றுவீரர்களான ஜக்ஸ் குணவர்தன,உபுல்வன் சேரசிங்க,மாலிக குருவித்தாராச்சி ஆகியோர் தங்களது அனைத்துப் பந்தயங்களையும் வெற்றிகொண்டனர்.

கன்னர்ஸ் சுப்பர் குறொஸின் எம்.எக்ஸ் 250 சி.சிபிரிவில் இரண்டுபந்தயங்களையும் வெற்றிகொண்ட ஜக்ஸ் குணவர்தன,சம்பியன் ஓட்டுநராகத் தெரிவானதோடு, ஃபோர்ட் லேசர் 1300 சி.சி, ஃபோர்ட் லேசர் 1500 சி.சிபந்தயங்களில் முதலாவது இடத்தை உபுல்வன் சேரசிங்க பெற்றுக்கொண்டார். இவர்களுக்குச் சற்றும் சளைத்தவராக இல்லாமல் செயற்பட்ட சியெட் அணியின் மாலிககுருவித்தாராச்சி,சுபாருலெகஸி பந்தயத்தைவெற்றிகொண்டார்.

உஷான் பெரேரா,டெவின் சேரசிங்க,எவோன் பியகீகுருசிங்கஆகியோர் முதல் மூன்று இடங்களுக்குள் 5 பந்தயங்களில் முடித்துக்கொண்டனர். இரண்டு எஸ்.எல்.ஜி.டிசுப்பர் கார் பந்தயங்கள், ஃபோர்ட் லேசர் 1300 சி.சி பந்தயம், இரண்டுமோட்டார் சைக்கிள் பந்தயங்கள் ஆகியவற்றிலேயே அவர்கள் இப்பெறுபேறுகளைப் பெற்றனர்.

கடந்த 5 வாரங்களுக்குள் மாத்திரம்,சியெட் பந்தய அணியானது இரண்டுகார்ப் பந்தயசம்பியன்ஷிப்களையும் ஒருமோட்டார் சைக்கிள் பந்தயத்தையும் வென்றுள்ளது. அத்தோடு, தனிப்பட்டபெறுபேறுகளைப் பொறுத்தவரை அணியின் வீரர்களில் ஜக்ஸ் குணவர்தனசம்பியன் ஓட்டுநராக இரண்டு தடவைகளும், உஷான் பெரேரா பந்தய வீரராக ஒருதடவையும் தெரிவாகியுள்ளனர்.

2019ஆம் ஆண்டின் சியெட் ரேசிங் அணியில் உபுல்வான் சேரசிங்க, உஷான் பெரேரா,மாலிககுருவித்தாராச்சி,டெவின் சேரசிங்க,சமொட் பெரேரா,கேணல் துமிந்த ஜயசிங்க,கேணல் இந்து மரக்கோன்,சமொட் சமரக்கோன் ஆகியசாரதிகளும் எவொன் பியகீகுரசிங்க, ஜக்ஸ் குணவர்தன ஆகியமோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் உள்ளடங்குகின்றனர்.

சியெட் நிறுவனமானதுசியெட் இலங்கை ஓட்டோ மொபைல் சாரதிகள் சங்கம் 2019 சம்பியன்ஷிப் தொடரின் பிரதானஅனுசரணையாளராகவும் செயற்படுகிறது. இவ்வாண்டின் தொடரானது ஐந்துபந்தயங்களின் அடிப்படையில் வெற்றியாளரைத் தீர்மானிக்கவுள்ளது.

கஜபாசுப்பர் குரொஸ்,கன்னர்ஸ் சுப்பர் குரொஸ்,சீகிரிய ரலி குரொஸ்,கட்டுகுருந்த மோட்டார் குரொஸ், ஃபொக்ஸ் ஹில் சுப்பர் குரொஸ் ஆகியனவே அந்த ஐந்துதொடர்களாகும். இவற்றில் ஃபொக்ஸ் ஹில் போட்டியில் அனைத்துமோட்டார் ஓட்டக் குழுக்களும் பங்குபற்றுவதோடு,விளையாட்டுத்துறை அமைச்சால் முகாமை செய்யப்படுகிறது.

மோட்டார் பந்தயப் போட்டிகளில் நாட்டில் முதன்மை வகிக்கும் வருடாந்தத் தொடருக்காக 10ஆவது தொடர்ச்சியான ஆண்டாகவும் பிரதான அனுசரணையை வழங்குவதோடு மாத்திரமல்லாமல், இலங்கையில் அதிகம் விற்பனையாகும் டயர் வணிகக் குறியான சியெட்,அடுத்த மூன்றுஆண்டுகளுக்கு ஸ்ரீ லங்காஓட்டோமொபைல் ஸ்போர்ட்ஸ் அமைப்பால் அனுமதியளிக்கப்பட்ட 'வண் மேக்' என்றதொடருக்கும் ஆதரவளிக்கவுள்ளது.

டார்மக் வாகன ஓட்டங்களாக அமையவுள்ள இத்தொடரில் சியெட் வாகனடயர்களையே போட்டியாளர்கள் பயன்படுத்தவுள்ளனர்.

 

Thu, 10/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை